சேலத்தில் விஜய் பிரச்சாரம்? இடத்தை தேர்வு செய்யும் பணி நடக்குதாம்... தொண்டர்கள் குஷி...!
டிசம்பர் 30 ஆம் தேதி விஜய் சேலத்தில் பிரச்சாரம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
2009-இல் தொடங்கிய விஜய் மக்கள் இயக்கம், முதலில் சமூக சேவை மையமாக செயல்பட்டது. 2011 சட்டமன்றத் தேர்தலில் அதிமுக-தலைமையிலான கூட்டணியை ஆதரித்து, அக்கட்சியின் அமைப்பு வலிமையைப் பெற்றது. ஆனால் உண்மையான தேர்தல் சோதனை 2021 உள்ளூர் உடனடி தேர்தல்களில் வந்தது. விமி, சுயேத்தியாக 169 தொகுதிகளில் போட்டியிட்டு, 115 இடங்களில் வெற்றி பெற்றது. இது விஜயின் ரசிகர்களின் வாக்குச் சக்தியை நிரூபித்தது மட்டுமின்றி, த.வெ.க-வின் எதிர்காலத் தேர்தல் உத்திகளுக்கு அடித்தளமிட்டது.
இந்த வெற்றி, கிராமப்புற மற்றும் இளைஞர் வாக்காளர்களிடம் விஜயின் ஈர்க்கத்தை வெளிப்படுத்தியது, அது தற்போது த.வெ.க-வின் தேர்தல் இயந்திரத்தின் முதன்மை ஆகாரமாக உருவெடுத்துள்ளது. 2026 சட்டமன்றத் தேர்தலை நோக்கி அரசியல் கட்சிகள் பயணிக்க தொடங்கிவிட்டன. அதன்படி, தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் நேற்று ஈரோட்டில் மக்கள் சந்திப்பு நடத்தினார். தமிழக அரசியலில் புதிய அலை என்று கூறப்படும் விஜய் மிக தீவிரமாக பிரச்சாரம் நடத்தி வந்தார்.
கரூர் சம்பவம் அதற்கு முட்டுக்கட்டை போட்டது. இந்த நிலையில் அதிலிருந்து மீண்ட விஜய், மீண்டும் தனது மக்கள் சந்திப்பை உரிய பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் நடத்துகிறார். புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நடத்தி இருந்தார் விஜய். நேற்று ஈரோடு மாவட்டத்தில் விஜய் மக்கள் சந்திப்பு நடத்தினார். அதற்கான கட்டுப்பாடுகள் மற்றும் தீவிர எற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டன. விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் மக்கள் கூட்டம் அலைமோதியது.
இதையும் படிங்க: “மாஸ்டரின் பிளாஸ்டர்”... விஜய்யின் ‘ஈரோடு’சபதம்.. 30 நிமிட பேச்சில் இதை எல்லாம் கவனிச்சீங்களா?
இந்த நிலையில், சேலத்தில் டிசம்பர் 30ம் தேதி தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய் மக்கள் சந்திப்பு கூட்டம் நடத்த இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மக்கள் சந்திப்பு நடத்த சீலநாயக்கன்பட்டி உள்ளிட்ட 3 இடங்களைக் குறிப்பிட்டு காவல்துறையினரிடம் அனுமதி கேட்க திட்டமிட்டு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க: அளப்பரிய ஆதரவு… எவ்வளவு நன்றி சொன்னாலும்… விஜய் உருக்கம்…!