நம்ம கூட மக்கள் இருக்காங்க.. இதுக்கு மேல என்ன வேணும்? மனம் திறந்த தவெக தலைவர் விஜய்..!
நம்முடன் மக்கள் உள்ளார்கள் எதற்கும் கவலைப்பட வேண்டாம் என தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் தெரிவித்தார்
தமிழக வெற்றிக் கழகத்தின் உறுப்பினர் சேர்க்கைக்கான செயலியை கட்சியின் தலைவர் விஜய் வெளியிட்டார். வெற்றிப் பேரணியில் தமிழ்நாடு என்ற செயலியை விஜய் வெளியிட்டார். சென்னை நீலாங்கரையை அடுத்த பனையூர் தமிழக வெற்றி கழகத்தின் அலுவலகத்தில் MY TVK எனும் செயலியை விஜய் வெளியிட்டுள்ளார்.
ஒரு செல்போன் எண்ணில் ஐந்து பேரை உறுப்பினராக்கும் வகையில் செயலி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. நிர்வாகிகளிடம் விஜய் நேரடியாக பேசும் வகையில் செயலை வடிவமைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த நிகழ்ச்சியில், ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஐந்து பேருக்கு தமிழக வெற்றிக்கழகத்தின் அடையாள அட்டை விஜய் வழங்கினார்.
தொடர்ந்து விழாவின் மேடையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய் உரையாற்றினார். அப்போது, கடந்த 1967, 1977 ஆம் ஆண்டு தேர்தல்களைப் போல 2026 சட்டமன்றத் தேர்தலும் அமையப்போகிறது என தெரிவித்தார். 90களில் நடந்த தன் குறிப்பிட்ட ஆண்டு தேர்தல்களில் அதிகார பலத்தை எதிர்த்து வெற்றி பெற்றுள்ளதாக கூறினார்.
இதையும் படிங்க: முதல்வர் ஸ்டாலின், விஜய் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல்! மோப்பநாய் கொண்டு தீவிர சோதனை
மக்களிடம் செல், மக்களிடம் இருந்து கற்றுக்கொள் என்ற அண்ணாவின் வார்த்தைகளை கடைப்பிடிப்போம் என கூறிய விஜய், அண்ணா சொன்னதை கடைப்பிடித்தாலே நாம் வெற்றி பெற்று விடுவோம் என்றார்.
தொடர்ந்து மக்களுடன் மக்களாகவே இருக்க போகிறோம் என தெரிவித்த விஜய், நல்லதே நடக்கும் வெற்றி நிச்சயம் என தெரிவித்தார்.
வீதிக்கு வீதி, தெருவுக்கு தெரு சென்று அனைவரையும் சந்தித்தவர்களே வெற்றி பெற்றுள்ளதாகவும் அவர், எல்லா குடும்பங்களையும் ஒன்றாக சேர்த்து உறுப்பினர்களாக இணைத்து நம்மால் நிச்சயமாக வெற்றி பெற முடியும் என தெரிவித்தார்.
மதுரையில் மாநாடு, மக்கள் சந்திப்பு, பயணம் என தொடர்ந்து மக்களுடன் மக்களாகவே இருக்கப் போகிறோம் என்றும் நம்மோடு மக்கள் உள்ளார்கள்... என்ன கவலை என கேள்வி எழுப்பிய விஜய், நல்லதே நடக்கும் என தெரிவித்தார்.
இதையும் படிங்க: இறங்கி வந்த இபிஎஸ்.. கூட்டணிக்கு வாங்க..! சீமான், விஜய்க்கு அழைப்பு..!