×
 

STALIN UNCLE… Its Wrong uncle! மதுரை மாநாட்டில் முதல்வரை விளாசிய விஜய்..!

மதுரையில் நடைபெற்ற தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாட்டில் முதல்வர் ஸ்டாலினை விஜய் விமர்சித்து பேசினார்.

தமிழக வெற்றி கழகத்தின் இரண்டாவது மாநில மாநாடு மதுரையில் உள்ள பாரப்பத்தியில் மிகப் பிரம்மாண்டமாக தொடங்கி நடைபெற்று வருகிறது. நடக்கும் இந்த மாநாட்டில் அலை கடலென தொண்டர்கள் கலந்து கொண்டுள்ளனர்.  இலட்சக்கணக்கான தொண்டர்கள் மத்தியில் தனது உரையை நிகழ்த்தினார் விஜய். அப்போது, நமது ஒரே கொள்கை எதிரி பாஜக தான் என்றும் ஒரே அரசியல் எதிரி திமுக தான் எனவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார். மக்கள் அரசியல் என்ற சவுக்கை கையில் எடுப்பதாக கூறிய விஜய், பாசிச பாஜகவும் பாய்சன் திமுகவும் தான் எதிரி என கூறினார்.

நமது ஒரே கொள்கை எதிரி பாஜக தான் என்றும் ஒரே அரசியல் எதிரி திமுக தான் எனவும் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் திட்டவட்டமாக தெரிவித்தார்.  பாஜகவின் கூட்டணி பொருந்தா கூட்டணியாக இருப்பதால் திமுக எதிர்ப்பதைப் போல் எதிர்த்து ஆதரிப்பதாக தெரிவித்தார். ஸ்டாலின் அங்கிள்., வாட் அங்கிள்., இட்ஸ் ராங் அங்கிள் என பேசினார். திமுக…,நீங்கள் நடத்தும் ஆட்சியில் பெண்களுக்கு பாதுகாப்பு இருக்கா, பொதுமக்களுக்கு பாதுகாப்பு இருக்கிறத., இயற்கை வளங்களுக்கு பாதுகாப்பு இருக்கிறதா, என்று சொல்லுங்கள் என்று கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: மணல் கடத்தலை தடுத்தால் மரணம் தான் பரிசு! நாடு போற்றும் நாலு ஆண்டா? நாக்கு கூசல.. விளாசிய நயினார்..!

பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுத்தால் போதுமா அனைத்தையும் மூடி மறைத்து விடலாம் என்று நினைக்கிறீர்களா என்று கேட்டார். பெண்களின் கதறல் சத்தம் உங்கள் காதில் கேட்கிறதா அங்கிள் என்று கேட்டார். இதெல்லாம் ஒரு பக்கம் இருக்க அப்பா என அழைப்பதாக ஸ்டாலின் கூறிக்கொள்ளதாக தெரிவித்தார். 

இதையும் படிங்க: எத்தனை கோடி பேர் வந்தாலும் கொள்கை பிடிப்பு முக்கியம்! முதல்வர் ஸ்டாலின் உறுதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share