தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல புதுச்சேரிக்கும் சேர்த்து குரல் கொடுப்பேன்., தொண்டர்கள் புடை சூழ விஜய் உரை…!
புதுச்சேரியில் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் உரையாற்றினார்.
இன்று தவெக பொதுக்கூட்டம் புதுச்சேரி உப்பளம் மைதானத்தில் நடைபெறுகிறது. பொதுக்கூட்டத்தில் விஜய் உரையாற்றினார். அப்போது, புதுச்சேரி மக்கள் அனைவருக்கும் வணக்கம், எல்லோரும் எப்படி இருக்கிறீர்கள் என தனது உரையை தொடங்கினார். மத்திய அரசுக்கு தான் தமிழ்நாடு தனி, புதுச்சேரி தனி ஆனால் நமக்கு அந்த வேறுபாடு கிடையாது நாம் ஒன்று தான் என்று தெரிவித்தார்.
தமிழ்நாடு, புதுச்சேரி வேறுவேறு என பிரித்தாலும் நாமெல்லாம் வேறு வேறு கிடையாது நாமெல்லாம் ஒன்று தான். சொந்தம் தான் என்று தெரிவித்தார். உலகத்தில் எந்த மூலையில் தமிழர்கள் இருந்தாலும் அவர்கள் நம் உயிர் தான் என்று தெரிவித்தார். மகாகவி பாரதியார் இருந்த மண், பாரதிதாசன் பிறந்தமண் போன்ற சிறப்புகளை பெற்றது புதுச்சேரி என்று கூறினார். தமிழ்நாட்டில் ஆட்சி அமைப்பதற்கு முன்பாகவே எம்ஜிஆர் புதுச்சேரியில் ஆட்சி அமைத்தார் என்றும் அவர் பேசினார்.
நமக்காக வந்தவர் எம்ஜிஆர் அவரை மிஸ் செய்து விடாதீர்கள் என நம்மை அலார்ட் செய்தது புதுச்சேரி தான் எனவும் நான் தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல புதுச்சேரிக்கும் சேர்த்து குரல் கொடுப்பேன்., இது எனது கடமை என்றும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: 2026ல் விஜய் தான் முதலமைச்சர்... புதுவையில் புஸ்ஸி ஆனந்த் உறுதி..!
தமிழ்நாடு போலவே புதுச்சேரி மக்களும் 30 ஆண்டுகளாக என்னை தாங்கி பிடித்துள்ளார்கள் எனவும் மகாகவி பாரதியார் இருந்த மண், பாரதிதாசன் பிறந்தமண் போன்ற சிறப்புகளை பெற்றது புதுச்சேரி என்றும் தெரிவித்தார். இந்திய அளவில் ரேஷன் கடைகளே இல்லாத மாநிலமாக புதுச்சேரி உள்ளது என்றும் புதுச்சேரி கடனை குறைத்து பொருளாதாரத்தை வளர்க்க போதிய திட்டங்கள் வகுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார். புதுச்சேரிக்கு போது எழுதி வரத்தை இல்லாததால் வெளியில் இருந்து கடன் வாங்க வேண்டிய சூழல் உள்ளதாக தெரிவித்த விஜய் 20 லட்சம் பேர் வாழும் புதுச்சேரி மத்திய நிதிக்குழுவில் இடம்பெறவில்லை எனவும் கூறினார்.
இதையும் படிங்க: உங்களால நிறைய பேர் செத்து இருக்காங்க... தவெக ஆனந்தை எச்சரித்த பெண் போலீஸ் அதிகாரி...!