×
 

பாழும் கிணற்றில் தள்ளினாலும் நாட்டைக் காத்த அரசன்..! கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் பேருரை…!

நிச்சயம் ஒரு ஒளி பிறக்கும் என்று கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் உரையாற்றினார்.

தமிழக வெற்றி கழகத்தின் சார்பில் மாமல்லபுரத்தில் நடைபெறும் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டத்தில் விஜய் சிறப்புரையாற்றினார். அப்போது, இது ஒரு அன்பான அழகான தருணம் என்றும் அன்பும் கருணையும் தான் அனைத்திற்கும் அடிப்படை என்றும் விஜய் தெரிவித்தார். தமிழ்நாடு மண்ணும் தாய் அன்பு கொண்ட மண் தான் என்றும் தாய்க்கு எல்லா பிள்ளைகளும் ஒன்று தான் எனவும் விஜய் தெரிவித்தார். மற்றவர்கள் நம்பிக்கையை மதிக்க கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். வழிபாட்டு முறைகள் மாறினாலும் நாம் அனைவரும் சகோதரர்கள் என்று தெரிவித்தார். 

ஒரு இளைஞனுக்கு எதிராக தனது சொந்த சகோதரர்களே பொறாமை பட்டு அவனை பாழும் கிணற்றில் தள்ளிவிட்டு அதிலிருந்து அவன் மீண்டு எப்படி அந்த நாட்டுக்கு அரசன் ஆகி தனக்கு துரோகம் செய்த சகோதரர்கள் மட்டுமல்ல அந்த நாட்டையே எப்படி பாதுகாத்தார் என்ற கதை பைபிளில் இருப்பதாக கூறினார். அனைவரும் அதை படிக்க வேண்டும் என்று கூறியுள்ளார். அந்த குறிப்பிட்ட கதை யாரைப் பற்றியது என்று நான் சொல்லி தெரிய வேண்டிய அவசியம் இல்லை என்று கூறினார். 

ஜோசப்பின் கதையை சுட்டிக்காட்டி கிறிஸ்துமஸ் விழாவில் விஜய் உரை நிகழ்த்தினார். நிச்சயம் ஒரு ஒளி பிறக்கும் என்றும் அந்த ஒளி நம்மை வழி நடத்தும் என்றும் தெரிவித்தார். இங்கு வந்திருக்கும் அருளாளர்கள் மற்றும் நண்பர்கள் என அனைவருக்கும் தனது கிறிஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள் தெரிவித்துக்கொள்வதாக விஜய் கூறினார்.

இதையும் படிங்க: அதிமுக - 45%, தவெக - 7%, நாதக - 3%- திமுக தலையில் இடியை இறங்கிய முக்கிய சமூகம்... வெளியானது ஷாக்கிங் சர்வே ரிசல்ட்...!

அனைத்து புகழும் எல்லாம் வல்ல இறைவனுக்கு என்றும் பிரைஸ் த லார்ட் என்றும் உறுதியாக இருங்கள் வெற்றி நிச்சயம் எனவும் தெரிவித்தார். நெஞ்சில் குடியிருக்கும் உங்கள் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் விழாவிற்கு வந்துள்ள அனைத்து சிறப்பு விருந்தினர்களுக்கும் நன்றியை தெரிவித்துக் கொண்டார். 

இதையும் படிங்க: தவெக கிறிஸ்துமஸ் விழா கோலாகல தொடக்கம்... முக்கியஸ்தர்களுக்கு பொன்னாடை போர்த்தி வரவேற்ற விஜய்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share