×
 

#BREAKING இதுதான் உங்க டக்கா? தவெக கோட்டையாக மாறிய கரூரில் ஆளும் கட்சியை கிண்டலடித்த விஜய்..!!

கரூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சொன்னார்களே செய்தார்களா? என கரூரில் தவெக தலைவர் விஜய் தொண்டர்கள் மத்தியில் ஆவேசமாக பேசினார்.

தமிழக வெற்றிக் கழகத் (தவெக) தலைவரும், பிரபல நடிகருமான தளபதி விஜய், இன்று (செப்டம்பர் 27) நாமக்கல் மற்றும் கரூர் மாவட்டங்களில் தனது தேர்தல் பிரச்சார சுற்றுப்பயணத்தைத் தொடங்கியுள்ளார். கடந்த செப்டம்பர் 13-ம் தேதி திருச்சியில் தொடங்கிய இந்த மக்கள் சந்திப்பு தொடர் திருச்சி, அரியலூர், திருவாரூர், நாகப்பட்டினம் போன்ற இடங்களைத் தொட்டு வந்துள்ளது. இன்றைய பயணம், விஜயின் அரசியல் பயணத்தில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என தவெக தொண்டர்கள் நம்புகின்றனர்.

கடந்த பிரச்சாரங்களில் அவர், ஊழல், வேலையின்மை, விவசாயிகள் பிரச்சினைகள் போன்றவற்றை எதிர்த்து பேசியது பெரும் கவனத்தை ஈர்த்தது. நாமக்கல் - கரூர் பகுதிகளில் தொழிலாளர்கள், விவசாயிகள் அதிகம் உள்ளதால், இங்கு விஜயின் பேச்சு உள்ளூர் பிரச்சினைகளைத் தொடும் என்பது உறுதி. தவெகவின் இலக்கு, 2026 சட்டமன்றத் தேர்தலுக்கு முன் மக்களிடம் நேரடியாக சென்று ஆதரவைப் பெறுவது ஆகும்.

இதையும் படிங்க: உங்க விஜய் வரேன்... போட்றா வெடிய... நாமக்கல்லில் விஜய் பிரச்சாரத்திற்கு அனுமதி...!

இன்று முன்னதாக நாமக்கல்லில் மக்கள் மற்றும் தொண்டர்கள் மத்தியில் பேசிய தவெக தலைவர் விஜய், திமுகவை கடுமையாக விமர்சித்ததோடு, கிட்னி திருட்டு விவகாரம் குறித்து தனது ஆதங்கத்தை கொட்டித்தீர்த்தார். மேலும் தவெகவுக்கும் திமுகவுக்கும் இடையே தான் போட்டி என திட்டவட்டமாக கூறிய அவர், வரும் தேர்தலில் தவெக ஆட்சி அமைந்தவுடன் மக்களின் அடிப்படை தேவைகள் நிறைவேற்றப்படும் என்று வாக்குறுதி அளித்து தனது உரையை முடித்துக்கொண்டார்.

இதனையடுத்து கரூர் நோக்கி சென்றுகொண்டிருந்த தவெக தலைவர் விஜய், அங்கு கூடியிருந்த தொண்டர்களை கண்டதும் பிரச்சார வாகனத்தின்மீது ஏறி நின்று அனைவருக்கும் கையசைத்து நன்றி தெரிவித்தார். பின்னர் கரூர் வேலுசாமிபுரத்தில், காவல்துறைக்கு எனது மனமார்ந்த நன்றிகள் என தனது உரையை தொடங்கிய விஜய், அமராவதி ஆற்றங்கரையில் இருக்கும் கரூரை பற்றி பெருமையாக சொல்ல நிறைய விஷயம் உள்ளது. ஆனால் சமீப காலமாக இந்தியாவிலேயே கரூர் என்று சொன்னாலே ஒரே ஒரு பேர் தான் மிகவும் பிரபலமாக உள்ளது அதற்கு யார் காரணம் என்று செந்தில் பாலாஜியை மறைமுகமாக சாடினார். 

மேலும் கரூர் மாவட்டத்தில் பேரிச்சை வளர்க்க சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும் என சொன்னார்களே செய்தார்களா என கேள்வி எழுப்பிய அவர், பேரிச்சியை விடுங்கள் பேரிச்சை விதையையாவது கண்ணில் காட்டினார்களா? துபாய் குறுக்கு சந்தை கதை தான் என்றும் கரூரில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என சொன்னார்களே செய்தார்களா?.. விமான நிலையம் கோரி ஆட்சியே முடியும் காலத்தில் மத்திய அரசிடம் கோரிக்கை வைத்துள்ளார்கள் இதுதான் உங்கள் டக்கா? என்றும் ஆளும்கட்சியை கிண்டலடித்தார் விஜய்.  மேலும் பரந்தூர் போல் மக்கள் பாதிக்காத வகையில் கரூரில் விமான நிலையம் அமைக்கப்பட வேண்டும் என்று கூறினார்.
 

இதையும் படிங்க: விஜய்க்கு கிரேன் மூலம் மாலை... கோர்ட்டில் தவெக நிர்வாகிகள் சரண்...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share