#TNElectionResults2026: தமிழகத்திலேயே அதிக வாக்குகள் வித்தியாசத்தில் லீடிங்... மாதவரம் தவெக வேட்பாளர் தான் டாப்பு... வியக்க வைக்கும் மேஜிக் நம்பர்...!!
தவெக வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட சுமார் 83,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருக்கிறார்.
தமிழகம் முழுவதும் 62 வாக்கு எண்ணிக்கை மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. மின்னணு இயந்திரங்களில் பதிவான வாக்குகளை எண்ணுவதற்காக ஒரு தொகுதிக்கு ஒன்று வீதம் 234 வாக்கு எண்ணும் அறைகளும், தபால் வாக்குகளை எண்ணுவதற்காக கூடுதலாக 240 அறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. இன்று காலை 8 மணி முதல் வாக்கு எண்ணிக்கையானது அமைதியான முறையில் நடைபெற்று வருகிறது.
சட்டமன்ற தேர்தலில் பதிவான வாக்குகள் தற்போது எண்ணப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மாதவரம் சட்டமன்ற தொகுதியில், தவெக வேட்பாளர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட திமுக வேட்பாளரை விட சுமார் 83,000க்கும் அதிகமான வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றிருக்கிறார்.
எம்.எல்.விஜயபிரபு (தவெக) -1,12,733
எஸ்.சுதர்சனம் (திமுக) - 60,386
வாக்கு வித்தியாசம் - 52,347
தவெக முன்னிலையில் இருக்கும் பல தொகுதிகளில் மார்ஜின் மிகப்பெரிய நம்பராக இருக்கிறது. அடுத்தடுத்த சுற்றுகளில் எட்டி பிடிக்க முடியாத அளவுக்கு நம்பர் இருப்பதால் திமுக மற்றும் அதிமுக கூட்டணி வேட்பாளர்கள் கலக்கமடைந்திருக்கின்றனர்.
இதையும் படிங்க: #TNElectionResults2026: கோவை தெற்கில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி வெற்றி..!!
இதையும் படிங்க: #BREAKING: #TNElectionResults2026: ஆட்டோ ஓட்டுநர் TO MLA..! ராயபுரத்தில் விஜய் தாமு வெற்றி..!! டெபாசிட் இழந்த ஜெயக்குமார்..!!