உங்க சாப்பாட்டில் மண்ணள்ளி போட்டனா.? கரூர் சம்பவம் குறித்த மனம் திறந்த விஜய்..!!
கரூர் சம்பவம் குறித்து தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் மனம் திறந்து பேசினார்.
2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கியுள்ள நிலையில், தேர்தல் ஆணைய விதிமுறைகளுக்கு உட்பட்டு, வீடு வீடாக வாக்கு சேகரிப்பு, தெரு முனை கூட்டங்கள், பொதுக் கூட்டங்கள் என பல்வேறு வடிவங்களில் அரசியல் கட்சிகள் சார்பில் பிரச்சாரம் முன்னெடுக்கப்படுகிறது. பல தொகுதிகளில் வேட்பாளர்கள் தங்கள் கட்சித் தொண்டர்களுடன் சேர்ந்து வாக்காளர்களை நேரடியாக சந்தித்து, “ஒரு முறை வாய்ப்பு கொடுங்கள், தலைமுறைக்கும் மாற்றம் வரும்” என்ற முழக்கத்துடன் மக்களிடம் சென்று கொண்டிருக்கின்றனர். இன்றுடன் பிரச்சாரங்கள் நிறைவு பெறுகின்றன.
தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய் இன்று சென்னையில் பரப்புரை செய்கிறார். அதைத் தொடர்ந்து கழக நிர்வாகிகள் கூட்டத்திலும் கலந்துக் கொண்டார். இது தொடர்பான முழு அறிவிப்பை தலைமை கழகம் வெளியிட்டது. ஒய் எம் சி எம் மைதானத்தில் நடந்த கழக நிர்வாகிகள் கூட்டத்தில் விஜய் கலந்து கொண்டு பேசினார்.
அப்போது, ஓம் சக்தி பராசக்தி திமுக ஒரு தீய சக்தி, திமுகவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப் போகின்ற நாள் மே 4 என்று தெரிவித்தார். கரூரில் என்ன நடந்தது என்று கரூர் மக்களை கேட்டாலே புட்டு புட்டு வைப்பார்கள் என்றும் என் மேல் ஏன் பழியை தூக்கி போட்டீர்கள் எனவும் கேள்வி எழுப்பினார். நாங்கள் அரசியல் பண்ண மாட்டோம் என வீடியோ வெளியிட்டு விட்டு சட்டப்பேரவையில் வந்து என் மீது பழி போட்டது ஏன் என்று கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: வந்தாச்சு தேர்தல் திருவிழா..! விசிலுக்கு ஓட்டு போடுங்க மக்களே..! விஜய் வேண்டுகோள்..!
காவல்துறையினர் அனுமதி கொடுத்த நேரத்தில்தான் கரூரில் இருந்தேன் என்றும் கூறினார். உலகமே நேரலையில் என்னை பார்த்துக் கொண்டிருந்தபோது மனசாட்சியே இல்லாமல் என் மீது பழி போட்டது ஏன் என்ற கேள்வி எழுப்பினார். நீங்கள் சாப்பிடும் சாப்பாட்டில் மண்ணள்ளி போட்டேனா என்றும் என் மீது ஏன் இத்தனை வஞ்சம் எனவும் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: விஜய் இன்று அனல் பரப்புரை..! கழக நிர்வாகிகள் கூட்டத்திற்கு 5 ஆயிரம் பேர் மட்டுமே அனுமதி..!