திமுகவை தொட்டுக்கூட பார்க்க முடியாது... பாஜகவுக்கு சவால் விட்ட உதயநிதி..!
பாஜகவால் திமுகவை தொட்டு கூட பார்க்க முடியாது என உதயநிதி ஸ்டாலின் சவால் விட்டார்.
தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் அணுகி வருவதை அடுத்து, ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தனது ஆதரவை இன்னும் வலுப்படுத்தி வருகிறது. திமுக, மீண்டும் ஆட்சியைத் தக்கவைக்கும் என்று கட்சியின் முதன்மைத் தலைவர்கள் உறுதியாகப் பேசுகின்றனர். குறிப்பாக, திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் இந்தத் தேர்தலில் தங்கள் கட்சி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெறும் என்பதில் முழு நம்பிக்கையுடன் உள்ளனர்.
திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், கட்சியின் பல்வேறு கூட்டங்களிலும், பொது மன்றங்களிலும் 2026 தேர்தலில் திமுகவின் வெற்றியை உறுதிப்படுத்தி வருகிறார். திமுகவின் ஆட்சியில் மக்கள் நலத் திட்டங்கள், பெண்களுக்கு இலவச பேருந்துப் பயணம், மாதம் ரூ.1000 நிதி உதவி போன்றவை மக்களின் வாழ்க்கையை மேம்படுத்தியுள்ளதாகவும், இதனால் 2026ல் மீண்டும் ஆட்சி அமைவதென்பது தவிர்க்க முடியாதது என்றும் முதலமைச்சர் கூறி வருகிறார். இந்த உறுதி மொழிகளுக்கு ஆதரவாக, திமுக எம்பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் தங்கள் கருத்துகளைத் தொடர்ந்து பகிர்ந்து வருகின்றனர்.
திமுக மூத்த தலைவர்கள், திமுகவின் வரலாற்று வெற்றிகளை நினைவூட்டி, 2021ல் 133 இடங்களை வென்றதுபோல் 2026ல் அதற்கும் மேல் சாதனை படைப்போம் என்பதை வலியுறுத்துகின்றனர். திமுகவின் அனுபவமே வெற்றியை தேடித்தரும் என்றும் கூறி வருகின்றனர்.
இதையும் படிங்க: பீர் அடிச்சுட்டு இளையராஜா போட்ட ஆட்டம் இருக்கே! பாராட்டு விழாவில் பங்கம் செய்த ரஜினிகாந்த்…
திமுகவை தொட்டு கூட பார்க்க முடியாது என துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திட்டவட்டமாக தெரிவித்தார். எத்தனையோ நம்பிக்கை துரோகங்கள், சோதனைகள், எதிரிகளை நாம் சந்தித்துள்ளோம் என்றும் நாம் சண்டை போடாத ஆட்களே இல்லை என்றும் சண்டை போடும் அளவு தகுதியானவர்கள் இந்தியாவிலேயே இல்லை எனவும் தெரிவித்தார். தமிழகத்தை எட்டி கூட பார்க்க முடியவில்லையே என மத்திய பாஜக அரசு இயங்குவதாகவும் திமுகவை தொட்டு கூட பார்க்க முடியாது எனவும் சவால் விட்டார். 75 ஆண்டுகள் ஆனாலும் எழுச்சியோடு திமுக இருக்கும் என உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
இதையும் படிங்க: எவ்ளோ பெருமையா இருக்கு தெரியுமா... மாணவர்களுக்கு சிறப்பு பேருந்துகள்! முதல்வர் பெருமிதம்