இந்தியாவிலேயே விளையாட்டுத் துறையில் நம்பர் ஒன் தமிழ்நாடுதான்... துணை முதல்வர் உதயநிதி பெருமிதம்...!
இந்தியாவிலேயே விளையாட்டுத் துறையில் நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.
கோவையில் அமைந்துள்ள சர்வதேச தரத்திலான ஹாக்கி மைதானத்தை தமிழ்நாடு துணை முதலமைச்சரும் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். கோயம்புத்தூர் மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் ஆர்.எஸ்.புரம் பகுதியில் 7.02 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இந்த மைதானம், கோவை விளையாட்டு ஆர்வலர்களின் நீண்ட கால கனவை நிறைவேற்றும் ஒரு மைல்கல்லாக விளங்குகிறது.
இந்தத் திட்டம் கடந்த 2025 ஏப்ரல் 27ஆம் தேதி உதயநிதி ஸ்டாலினால் அடிக்கல் நாட்டப்பட்டது. சுமார் 9.67 கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த மைதானம், சர்வதேச ஹாக்கி கூட்டமைப்பு தரநிலைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனைத் திறந்து வைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தொடர்ந்து, ஈரோடு மாவட்டம் சித்தோட்டில் விளையாட்டு வீரர்களை காண உபகரணங்கள் வழங்கும் விழாவில் கலந்து கொண்டார்.
தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின், கலைஞர் ஸ்போர்ட்ஸ் கிட்ஸ் வழங்குவதன் மூலமாக ஏராளமான வீரர்கள் பயனடைந்துள்ளதாக தெரிவித்தார். விளையாட்டு வீரர்களுக்கான அடிப்படை வசதிகளை தமிழ்நாடு அரசு சிறப்பாக செய்து வருகிறது என்று கூறினார். விளையாட்டுத்துறையில் இந்தியாவிலேயே நம்பர் ஒன் மாநிலமாக தமிழ்நாடு திகழ்கிறது என்று பெருமிதம் தெரிவித்தார்.
இதையும் படிங்க: திமுக இளைஞரணி கூட்டத்துக்கு 17 கண்டீஷனஸ்... அமைச்சர் எ.வ. வேலு பிரஸ்மீட்...!
100 விளையாட்டு வீரர்களுக்கு அரசு மற்றும் பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார். தமிழ்நாட்டைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெறுவதாகவும் கூறினார். சர்வதேச மற்றும் தேசிய அளவிலான ஹாக்கி போட்டிகள் கோவை ஹாக்கி மைதானத்தில் நடத்தப்படும் என்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் உறுதிப்பட தெரிவித்தார். பேரறிஞர் அண்ணா கலைஞர் கருணாநிதியிடம் பயிற்சி எடுத்தவர் முதலமைச்சர் ஸ்டாலின் என்றும் கூறியுள்ளார்.
இதையும் படிங்க: NEW DRAVIDIAN STOCK... ALL ARE WELCOME.! திமுக இளைஞரணி சந்திப்புக்கு முதல்வர் அழைப்பு...!