“டெல்லி அணியை கிளீன் போல்ட் ஆக்கனும்..” - தொண்டர்களை உற்சாகப்படுத்திய உதயநிதி ஸ்டாலின்...!
டெல்லி அணியை கிளீன் போல்ட் செய்வோம் என உதயநிதி ஸ்டாலின் பேச்சு
அரியலூர் மாவட்டம் ஆண்டிமடத்தில் அண்ணா மற்றும் கலைஞர் சிலைகளையும் , தேவனூரில் முன்னாள் மாநிலங்களவை உறுப்பினருமான மறைந்த சிவசுப்ரமணியன் நினைவு நூலகத்தை திறந்து வைத்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசிய போது: அதிமுக - பாஜக கூட்டணி தேர்தலுக்குப் பிறகு எடப்பாடி பழனிசாமி அதிமுகவை பாஜகவுடன் இணைத்துவிடுவார்.
அதிமுக தற்போது பாஜகவிடம் அடிமையாக உள்ளது. முன்னாள் அமைச்சர்களை ED மற்றும் CBI சோதனைகள் மூலம் அமித் ஷா மிரட்டி வைத்துள்ளார். ஆனால், இதுபோன்ற மிரட்டல்களுக்கு திமுக தொண்டன் அஞ்சமாட்டான்.
ஒன்றிய பாஜக அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய ₹3,500 கோடி கல்வி நிதி மற்றும் 100 நாள் வேலைவாய்ப்புத் திட்ட நிதியை வழங்காமல் வஞ்சிக்கிறது. வரும் சட்டமன்றத் தேர்தலில் திமுக தலைமையிலான 'தமிழ்நாடு அணி', பாஜக-அதிமுக அடங்கிய 'டெல்லி அணியை' கிளீன் போல்ட் செய்ய வேண்டும். குறைந்தது 200 தொகுதிகளில் வெற்றி பெற்று, மு.க. ஸ்டாலின் அவர்கள் மீண்டும் முதலமைச்சராகத் தொண்டர்கள் களத்தில் தீயாகப் பணியாற்ற வேண்டும் என பேசினார்.
இதையும் படிங்க: “ஆல் ரவுண்டர் ஆட்சி... அதுக்கு இதெல்லாம் சாட்சி...” - செம்ம கெத்தாக ஸ்டேட்மெண்ட் கொடுத்த உதயநிதி...!
திருச்சி சிறுகனூரில் கடந்த 9ம் தேதி நடைபெற்ற திமுகவின் 12-ஆவது மாநில மாநாட்டில், அக்கட்சியின் தலைவரும், தமிழக முதல்வருமான மு.க.ஸ்டாலின், “நடக்க இருக்கும் தேர்தல், திமுக vs என்டிஏ கிடையாது. தமிழ்நாடு vs என்டிஏ. வெல்லப்போவது, தமிழ்நாடு அணியா, டெல்லி அணியா என்பதுதான் 2026 தேர்தல். இதில் நம்முடைய தமிழ்நாடு அணி வெற்றி பெற வேண்டும் என்றால், திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிதான் வெற்றி பெற வேண்டும்” என பேசியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: சமஸ்கிருதத்துக்கு ரூ.2,500 கோடி; தமிழுக்கு ரூ.147 கோடி... மத்திய அரசின் மாற்றாந்தாய் மனநிலையை போட்டுடைத்த உதயநிதி....!