குறுக்கு வழி ஆட்சி... பனையூர் பங்களாவில் பதுங்கல்..! உதயநிதி துணிச்சல பார்த்து இருக்கீங்களா CM சார்..? விளாசிய அப்பாவு..!
திமுகவினர் மீது குறி வைப்பதாக கூறி முதலமைச்சர் விஜயை அப்பாவு விமர்சனம் செய்து உள்ளார்.
MLA கடத்தல், குதிரை பேரம், சோபா அன்பளிப்பு மூலம் குறுக்கு வழியில் ஆட்சிக்கு வந்து, திமுகவினரை குறி வைத்து காவல்துறையை ஏவி பொய் வழக்குகள் பதிவு செய்து முதல்வர் விஜய் தொடர் மிரட்டலில் ஈடுபட்டு வருவதாக முன்னாள் சபாநாயகர் அப்பாவு தெரிவித்துள்ளார். சட்டமன்ற உறுப்பினர்கள் அனிதாராதாகிருஷ்ணன் , மார்க்கண்டேயன் கைது, செந்தில் பாலாஜி மீது பொய் வழக்கு, GenZ அமைப்பைச் சேர்ந்த இளைஞர்கள் கைது என்று தவெக அரசின் வெறியாட்டம் தொடரும் போதெல்லாம் மு க ஸ்டாலினும் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதியும் கடும் கண்டனம் தெரிவிப்பதோடு சட்டபூர்வ நடவடிக்கை எடுத்து கட்சிக்காரர்களை காப்பாற்றி விஜயை ஓட ஓட விரட்டி வருகின்றனர் என்று குறிப்பிட்டார்.
திமுகவினரால் சின்ன கலைஞர் என்று அன்போடு அழைக்கப்படும் உதயநிதி காலம் நேரம் பார்க்காமல் பாளையங்கோட்டை சிறைக்கு வந்து மார்க்கண்டேயன் MLA வை சந்தித்து ஆறுதல் கூறியது திமுக கழக நிர்வாகிகள், தொண்டர்களிடையே பெறும் வரவேற்பையும், உற்சாகத்தையும், எழுச்சியையும் ஏற்படுத்தியுள்ளது என கூறியுள்ளார்.
கரூரில் விஜயை பார்க்க வந்த ரசிகர்கள், தவெக தொண்டர்கள் அவர் கண்ணெதிரே செத்து மடிந்த போதும் கண்டு கொள்ளாமல் தனி விமானம் மூலம் சென்னை திரும்பி பனையூர் பங்களாவில் பதுங்கி ஒழிந்ததைபோல் திமுக கழகம் எந்த அடக்குமுறைக்கும் அஞ்சாது என்பதை புரிந்து கொள்ளுங்கள் CM sir என்று விமர்சித்தார்.
இதையும் படிங்க: நெருங்கும் பட்ஜெட்..! எகிறும் எதிர்ப்பார்ப்பு..!! உதயநிதி தலைமையில் முதல் திமுக எம்எல்ஏக்கள் கூட்டம்..!
திமுக நிர்வாகிகளுக்கு ஒரு இன்னல் என்றால் உடனடியாக களத்தில் இறங்கும் கலைஞர், முகஸ்டாலின் வழியில் களம் இறங்கி துணிச்சலோடு குரல் கொடுப்பதோடு வருகின்ற சட்டமன்ற கூட்டத் தொடரில் த.வெ.க ஆட்சியில் தொடர்ந்து நடைபெற்று வரும் லஞ்ச, ஊழல், கொலை, கொள்ளை, கற்பழிப்பு, தமிழக உரிமைகளை பாதுகாக்க தவறியது போன்றவற்றை சட்டமன்றத்தில் எவ்வாறு விவாதிக்க வேண்டும் என்று திமுகழக எம்.எல்.ஏக்களை தயார் படுத்தியும் வருவது த.வெ.க அரசுக்கு பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது. மத்திய மாநில அரசுகளின் அடக்கு முறைகளைக் கண்டு அஞ்சாமல் அவர்களது தவறுகளை சுட்டிக்காட்டி, தமிழகத்தின் பெருமையை காப்பாற்றும் தமிழக எதிர்க்கட்சித்தலைவரின் துணிவை பார்த்தாவது செயல்படுவீர்களா என முதல்வர் விஜய்க்கு கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: டெல்லி காட்சிகள் அதிர்ச்சியளிக்குது! நீட் போராட்ட தடியடிக்கு உதயநிதி ஸ்டாலின் கண்டனம்!