ஜாடிக்கேத்த மூடி... மோடிக்கேத்த EPS..! பூந்து விளாசிய உதயநிதி..!!
பாப்பிரெட்டிப்பட்டி திமுக வேட்பாளரை ஆதரித்து துணை முதல்வர் உதயநிதி வாக்குச் சேகரித்தார்.
2026 சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறுகிறது. அரசியல் கட்சியினர் தங்கள் வேட்பாளர்களை அறிவித்தனர். நேற்று வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில் பல்வேறு வேட்பாளர்கள் வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர். இதைத்தொடர்ந்து தங்கள் தேர்தல் பரப்புரையையும் தொடங்கி நடத்தி வருகின்றனர். திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.
பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று வாக்கு சேகரித்து வருகிறார். இன்று காலை திருவண்ணாமலைக்குச் சென்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் திருவண்ணாமலை வேட்பாளரும் அமைச்சருமான எ.வ. வேலுவை ஆதரித்து வாக்கு சேகரித்தார். இந்த நிலையில் பாப்பிரெட்டிபட்டி திமுக வேட்பாளர் பழனியப்பனை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.
தர்மபுரி மாவட்டம் கடத்தூரில் திமுக வேட்பாளர் பழனியப்பனை ஆதரித்து வாக்கு சேகரித்தார். அப்போது பேசிய அவர், அதிமுக என்னும் அடிமையை கூட்டிக்கொண்டு கொல்லைப் புறமாக தமிழ்நாட்டிற்குள் பாஜக நுழைய முயற்சிப்பதாக தெரிவித்தார். பாஜக B டீம், சீ டீம் என்று எத்தனை டீம் ஐ கூட்டிக்கொண்டு வந்தாலும் தமிழ்நாட்டில் சாம்பியன் திமுக தான் என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க: தேர்தல் வந்தாச்சு... ஓட்டு போடுங்க மக்களே..!! திருச்சியில் கே.என்.நேரு பரப்புரை..!!
ஜாடிக்கேத்த மூடி போல மோடிக்கேத்த அடிமை எடப்பாடி பழனிச்சாமி என்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார். பாஜகவின் முரட்டு அடிமையாக எடப்பாடி பழனிச்சாமி இருக்கிறார் என்று விமர்சித்துள்ளார். திமுக வேட்பாளர் பழனியப்பனை உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
இதையும் படிங்க: பாஜகவின் "முரட்டு அடிமை" EPS..! தி.மலையில் எ.வ.வேலுவை ஆதரித்து உதயநிதி ஸ்டாலின் பரப்புரை..!!