×
 

உதயநிதி ஸ்டாலினை முன்னிறுத்தும் திமுக! கனிமொழி அப்செட்! எதிர்க்கட்சி தலைவர் யார்?!!

எதிர்க்கட்சி தலைவர் தேர்வு தொடர்பாக, தி.மு.க., இளைஞரணி செயலர் உதயநிதியுடன், நேற்று மாலை உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தினர்.

தமிழக சட்டசபை தேர்தலில் எதிர்பாராத பின்னடைவை சந்தித்த திமுக, அடுத்த கட்ட அரசியல் நகர்வுகளுக்காக தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது. குறிப்பாக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் யார் என்ற கேள்வி தற்போது திமுக வட்டாரத்தில் அதிக கவனத்தை ஈர்த்துள்ளது. இதுதொடர்பாக திமுக இளைஞரணி செயலர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நேற்று முக்கிய ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

சமீபத்தில் நடந்த சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்துள்ளது. திமுக 59 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றுள்ளது. இந்த நிலையில், சட்டசபை திமுக குழு தலைவரை தேர்வு செய்ய இன்று மாலை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் எம்எல்ஏக்கள் கூட்டம் நடைபெற உள்ளது.

சட்டசபை திமுக தலைவராக தேர்வு செய்யப்படுபவரே அதிகாரப்பூர்வ எதிர்க்கட்சி தலைவராக இருப்பார் என்பதால், அந்த பதவிக்கு உதயநிதி ஸ்டாலின் பெயர் முக்கியமாக பேசப்படுகிறது. ஆனால் அவர் அந்த பொறுப்பை ஏற்க விரும்பவில்லை என்றால், கட்சியின் முதன்மை செயலர் கே.என்.நேருவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம் என்றும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதையும் படிங்க: விஜயை வீழ்த்த களமிறக்கப்படும் உதயநிதி ஸ்டாலினின் வலதுகரம்!! திமுக பிரம்மாஸ்திரம்! திருச்சி கிழக்கில் அதிரடி!

இதற்கிடையில் சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள குறிஞ்சி இல்லத்தில் உதயநிதி தலைமையில் உயர்நிலை செயல் திட்டக்குழு உறுப்பினர்கள் கலந்து கொண்ட முக்கிய ஆலோசனை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கே.என்.நேரு, எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், தங்கம் தென்னரசு, செந்தில் பாலாஜி, ஆர்.எஸ்.பாரதி, டி.கே.எஸ்.இளங்கோவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். ஆனால் திமுக துணைப் பொதுச்செயலர் கனிமொழி இந்த கூட்டத்தில் கலந்து கொள்ளாதது அரசியல் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.

கூட்டத்தில் சட்டசபை கொறடாவாக எ.வ.வேலுவையும், பொருளாளராக ஐ.பெரியசாமியையும் தேர்வு செய்வது குறித்தும் ஆலோசிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. மேலும், தேர்தல் தோல்விக்கான காரணங்கள் மற்றும் கட்சியின் அடுத்தகட்ட நடவடிக்கைகள் குறித்தும் விரிவாக விவாதிக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்த ஆலோசனை கூட்டத்திற்குப் பிறகு திமுகவில் முக்கிய மாற்றங்கள் மற்றும் புதிய பொறுப்புகள் அறிவிக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.

இதையும் படிங்க: என் புருசன் ஏன் தோத்தாரு? துர்கா ஸ்டாலின் புலன் விசாரணை?! கொளத்தூரில் நடந்தது என்ன! பகீர் தகவல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share