அரசியலில் நாங்க தான் சீனியர்..! எதிரி கட்சி இல்ல.. எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பேரவையில் உரை..!
எதிர்க்கட்சி தலைவராக உதயநிதி ஸ்டாலின் சட்டப்பேரவையில் இன்று உரையாற்றினார்.
தமிழக சட்டப்பேரவையில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் இன்று உரையாற்றினார். 1.54 கோடி வாகுகளை தந்த தமிழக மக்களுக்கு நன்றி திமுகவிற்கு வாக்களித்த தமிழக மக்களுக்கும் திமுகவிற்காக உழைத்த தொண்டர்கள் மற்றும் தோழமைக் கட்சிகளுக்கும் நன்றி என்று தெரிவித்தார். தன்னை இரண்டாவது முறையாக தேர்ந்தெடுத்து சட்டசபைக்கு அனுப்பிய சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதி மக்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
வரலாற்று சிறப்புமிக்க சட்டப்பேரவைக்கு சபாநாயகர் மற்றும் துணை சபாநாயகர் தேர்வு செய்யப்பட்டவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துக் கொண்டார். சிரித்த முகத்துக்கு சொந்தக்காரர் சபாநாயகர் பிரபாகர் என்றும் அனைவரிடமும் அன்புடன் பழகுபவர் என்று உதயநிதி பாராட்டு தெரிவித்தார்.
சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவராக எனது முதல் உரை இது என்றும் குறிப்பிட்டு பேசினார். திராவிட முன்னேற்ற கழகம் என்றும் ஆக்கப்பூர்வமான செயல்களை மட்டுமே செய்யும் கட்சி என்றும் எதிரி கட்சியாக இல்லாமல் எதிர்க்கட்சியாக செயல்படும் என்றும் தெரிவித்து உள்ளார். தமிழக வெற்றிக்கழக அரசு அனைவருக்குமான அரசாக திகழ வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். பேரவையில் எதிரெதிரே அமர்ந்திருந்தாலும் தமிழக மக்களின் நன்மை என்று வரும்போது அனைவரும் ஒரே வரிசைதான் என்றும் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிரடி திருப்பங்கள்..! எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி.? நாளை திமுக MLAக்கள் கூட்டம்..!
அரசியலில் உங்களுக்கு திமுக தான் சீனியர் என்று கூறியுள்ளார். அறிவுரைகளை முதல்வர் விஜய் கேட்டுக் கொள்வார் என்று நம்புவதாகவும் உங்களை கோபப்படுத்த மாட்டோம் என்று தாங்கள் நம்புவதாகவும் கூறியுள்ளார். பேரறிஞர் அண்ணா வழியில் செயல்படுவோம் என்றும் உறுதிபட தெரிவித்தார். ஒரே கல்லூரியில் நானும் முதல்வரும் படைத்திருந்தாலும் மாநிலத்தை ஆள்வதில் நாங்கள் தான் சீனியர் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஒரு ஓட்டில் தோற்ற பெரியகருப்பன்..! வழக்கு தொடரப்படும்... உதயநிதி உறுதி..!