×
 

"அந்த நடிகை"..!! கலைஞரின் பேரன்-னு சொல்லி இப்படி ஒரு பேச்சா.? உதயநிதிக்கு வினோஜ் பி. செல்வம் கண்டனம்..!!

திமுக சார்பில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி பேச்சுக்கு வினோஜ் பி செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார்.

தஞ்சாவூர் நகரில் இன்று காலை திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பனகல் கட்டிடம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இளைஞர் அணி உள்ளிட்ட துணை அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி வறண்டு போய் இருப்பதாக குற்றம் சாட்டினார். நிர்வாகத் திறனற்ற அரசாக தமிழக வெற்றி கழக அரசு இருப்பதாக தெரிவித்தார். குருவை சாகுபடி முழுவதுமாக பொய்த்து போய்விட்டது என்று தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது என்றும் இதுவரை காவிரி நீர் வந்து சேரவில்லை என்றும் தெரிவித்தார். ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் ஆகியும் முதல்வர் வாயிலிருந்து பாஜக என்ற வார்த்தை வரவில்லை என்ற குற்றம் சாட்டிய உதயநிதி ஸ்டாலின், மகாராஷ்டிராவில் தமிழக விவசாயிகள் துரத்தியடிக்கப்பட்ட பின் முதல்வர் விஜய் வாய் திறக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கர்நாடகா செல்வதாக நாடக ஒன்றை முதல்வர் விஜய் ஆடியதாகவும் அரை நூற்றாண்டுகளாக நடைபெறும் சட்டப் போராட்டம் என்பதால் கர்நாடகா செல்ல வேண்டாம் என்ற முதலமைச்சர் கூறினோம் எனவும் தெரிவித்துள்ளார். 

முதல்வர் விஜய் குறித்து உதயநிதி ஸ்டாலின் பேசிக்கொண்டிருந்த போது அருகில் இருந்து ஒரு நடிகையின் பெயரை கூறியுள்ளார்கள். அதற்கு உதயநிதி ஸ்டாலின் சிரித்தபடியே எங்கு தண்ணீர் வரவில்லை என்றாலும் அங்கு தண்ணீர் வர வேண்டும் என்ற வார்த்தையை கூறினார். இதற்கு பாஜக நிர்வாகி வினோஜ் பி செல்வம் கண்டனம் தெரிவித்துள்ளார். 

கலைஞரின் பேரன் என்று சொல்லிக் கொண்டு, இப்படிப் பேசாவிட்டால் தான் ஆச்சரியம் என விமர்சித்துள்ளார். எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினும் ஒரு முன்னாள் நடிகர் தான். இருந்தும் சக கலைஞர்கள் குறித்து இப்படி அருவருப்பாக பேசி இருப்பது அதிர்ச்சி அளிக்கிறது என தெரிவித்துள்ளார். அவருக்கு நடிகர் சங்கம் சார்பில் கண்டனத்தை பதிவு செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார். 

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share