அசெம்பிளில கவனிச்சிக்குறேன்! உதயநிதி ஸ்டாலின் ஸ்கெட்ச்! சட்டசபை கூட்டத்தொடரில் முதல்வர் விஜய்க்கு காத்திருக்கும் நெருக்கடி!
எதிர்க்கட்சி தலைவராக, உதயநிதிக்கு முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால், தி.மு.க.,வினர் மத்தியிலும் அதிக எதிர்பார்ப்பு இருக்கிறது.
தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் வரும் 18ம் தேதி தொடங்கவுள்ள நிலையில், எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் சிறப்பு பயிற்சியில் தீவிரமாக ஈடுபட்டு வருகிறார். தமிழக வெற்றிக் கழகம் (த.வெ.க.) ஆட்சியின் முதல் பட்ஜெட் என்பதால் மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. இதே நேரத்தில், எதிர்க்கட்சித் தலைவராக உதயநிதிக்கும் இது முதல் முக்கிய சட்டசபை கூட்டத்தொடர் என்பதால் தி.மு.க. தரப்பிலும் பெரும் உற்சாகம் காணப்படுகிறது.
முன்பு நம்பிக்கை வாக்கெடுப்பின்போது உதயநிதி ஆற்றிய உரை பெரும் வரவேற்பைப் பெற்றது. அப்போது முதல்வர் விஜய் உடனடியாக பதிலளிக்க முடியாமல் வீட்டுக்குச் சென்று நீண்ட அறிக்கை வெளியிட்டது பலரது விமர்சனத்துக்கு உள்ளானது. இந்த நிலையில், பட்ஜெட் கூட்டத்தொடரின்போது உடனுக்குடன் பதிலடி கொடுக்க முதல்வர் விஜயும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இந்தச் செய்தியை அறிந்த உதயநிதியும் தனது தயாரிப்பை தீவிரப்படுத்தியுள்ளார். மேகதாது அணை, மின் வெட்டு, சட்டம் ஒழுங்கு உள்ளிட்ட முக்கிய பிரச்னைகளை சட்டசபையில் எடுத்து வைக்க தி.மு.க. திட்டமிட்டுள்ளது. இதற்காக காவிரி விவகாரத்தில் கடந்த காலங்களில் தி.மு.க. எடுத்து வந்த நிலைப்பாடுகள், முன்னாள் அமைச்சர்கள் மற்றும் ஓய்வுபெற்ற அதிகாரிக்களிடமிருந்து விரிவான தகவல்களை உதயநிதி சேகரித்து வருகிறார்.
இதையும் படிங்க: உதயநிதி வியூக வகுப்பாளர் விலகல்! தவெக + காங்., கூட்டணிக்கு தாவல்! விஜய்க்கு ஆதரவாக பணியாற்ற முடிவு!
மின் வெட்டு தொடர்பாக தற்போதைய மின்வாரிய அதிகாரி ஒருவர் மூலம் நேரடி தகவல்களைப் பெற்று வருகிறார். சட்டம் ஒழுங்கு விவகாரத்தில் கடந்த ஐந்தாண்டு புள்ளிவிவரங்களை தொகுத்து அவற்றை அடிக்கடி படித்து பயிற்சி செய்கிறார். மேலும், சட்டசபை நடவடிக்கைகளில் நீண்ட அனுபவம் கொண்ட அதிகாரிகளையும் அவர் சந்தித்து ஆலோசனை பெற்று வருகிறார்.
தினந்தோறும் சுமார் ஐந்து மணி நேரம் வரை இந்தப் பயிற்சியில் உதயநிதி முழு கவனத்துடன் ஈடுபடுவதாக தி.மு.க. மூத்த நிர்வாகிகள் தெரிவித்தனர். பட்ஜெட் கூட்டத்தொடரை தங்களுக்கு சாதகமாக மாற்றி, எதிர்க்கட்சித் தலைவராக தனது பலத்தை நிரூபிக்க உதயநிதி முழு முயற்சியும் எடுத்து வருவதாகக் கூறப்படுகிறது.
இரு தரப்பும் தீவிரமான தயாரிப்புடன் களமிறங்க உள்ள இந்த பட்ஜெட் கூட்டத்தொடர் தமிழக அரசியலில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்பதை நாடே ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறது.
இதையும் படிங்க: உதயநிதியை களத்தில் இறக்குங்க! மூத்த நிர்வாகிகளுக்கு ஓய்வு கொடுங்க! திமுகவில் திடீர் அதிகாரப்போர்!