சட்டப்பேரவை விவகாரத்தில் புதிய மோதல்..! நேரலையை துண்டிப்பதா..? சபாநாயகருக்கு உதயநிதி கடிதம்..!!
சட்டப்பேரவை நேரலை துண்டிப்பு தொடர்பாக உதயநிதி ஸ்டாலின் சபாநாயகருக்கு கடிதம் எழுதினார்.
தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் 2026 சட்டமன்றத் தேர்தல் ஒரு திருப்புமுனையாக அமைந்தது. தமிழக வெற்றி கழகம் தனிப்பெரும் கட்சியாக 108 இடங்களில் வெற்றி பெற்று, முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையில் சிறுபான்மை அரசை அமைத்தது. இந்தப் புதிய அரசு பொறுப்பேற்ற சில வாரங்களுக்குள், சட்டமன்ற நிகழ்வுகளை முழுமையாக நேரலையில் ஒளிபரப்பும் முடிவை எடுத்து அறிவித்தது.
இது தமிழக சட்டப்பேரவையின் செயல்பாடுகளில் பெரும் வெளிப்படைத்தன்மையை ஏற்படுத்தும் முக்கிய நடவடிக்கையாகக் கருதப்படுகிறது. இதுவரை தமிழக சட்டப்பேரவை கூட்டங்கள் பெரும்பாலும் பாரம்பரிய ஊடகங்கள் வாயிலாகவே பகிரப்பட்டன. சில முக்கிய நிகழ்வுகள் மட்டுமே தேர்ந்தெடுத்து ஒளிபரப்பப்பட்டன. ஆனால் தவெக அரசு பொறுப்பேற்ற பிறகு, முதல் சட்டப்பேரவை கூட்டத்தொடரிலிருந்தே முழு நேரலை ஒளிபரப்பு தொடங்கியது.
ஆளுநர் உரை, சபாநாயகர் தேர்தல், நம்பிக்கை வாக்கெடுப்பு, விவாதங்கள் உள்ளிட்ட அனைத்து நிகழ்வுகளும் நேரடியாக ஊடகங்கள் மூலம் ஒளிபரப்பு செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. இருப்பினும் சட்டப்பேரவை நிகழ்வுகள் நேரலை துண்டிக்கப்பட்டதாக எதிர் கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இந்த நிலையில், சட்டமன்ற நிகழ்வுகளை நேரலை செய்வது தொடர்பாக சபாநாயகர் பிரபாகருக்கு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் கடிதம் எழுதி உள்ளார். சட்டமன்ற நேரலை தொடர்பாக கொடுத்த வாக்கை காப்பாற்றி காப்பாற்ற தவறிவிட்டதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: முதல்வர் விஜயின் தனி தீர்மானம்..! முழு ஆதரவு... கிரீன் சிக்னல் காட்டிய திமுக..!!
எதிர் கட்சியினர் விவாதத்தை மக்கள் தெரிந்து கொள்ள விடாமல் செய்வது ஜனநாயகத்தை இருட்டில் தள்ளுவதற்கு சமம் என்று தெரிவித்துள்ளார். ஒரே நேரத்தில் சட்டசபை, மக்கள் பிரதிநிதி, ஊடகங்களை அவமானப்படுத்தும் செயலுக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார். அமைச்சர் ராஜ்மோகன் பேசும் போது மறுநாளே நேரலை செய்யப்படும் என்று கூறியதாக குறிப்பிட்டுள்ளார். ஆளுங்கட்சியினருக்கு வேண்டிய விவாத வீடியோக்கள் மட்டும் மாலையில் வெளியீடு செய்யப்படுவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: யோக்கிதையே இல்ல..! இது ஜனநாயக சோஃபா... அமைச்சர் அருண்ராஜ் விளாசல்..!