×
 

காலில் விழுந்தது தப்பு இல்ல… காலை வாரிவிட்டது தான் தப்பு..! எடப்பாடியை விமர்சித்த உதயநிதி..!!!

கன்னியாகுமரி மாவட்டத்தில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார்.

தமிழக சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு திமுக சார்பில் போட்டியிடும் வேட்பாளர்கள் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்களை ஆதரித்து துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு தொகுதிகளுக்கு சென்று வேட்பாளர்களை ஆதரித்து உதயசூரியன் மற்றும் கூட்டணி கட்சி சின்னங்களுக்கு பொதுமக்கள் வாக்களிக்க வேண்டும் என்றும் திமுகவின் சாதனைகளை எடுத்துக் கூறியும் பரப்புரை மேற்கொண்டு வருகிறார்.

அதுமட்டுமல்லாது எடப்பாடி பழனிச்சாமியை கடுமையாக விமர்சித்து வருகிறார் உதயநிதி. சசிகலா காலில் எடப்பாடி பழனிச்சாமி விழுந்த புகைப்படத்தை காட்டி பல்வேறு மாவட்டங்களில் பிரச்சாரங்களை நடத்தி வருகிறார். இந்த நிலையில், கன்னியாகுமரி மாவட்டம் பத்மநாபபுரம் சட்டமன்ற தொகுதியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பிரச்சாரம் மேற்கொண்டார்.

பத்மநாபபுரம் தொகுதி மார்க்சிஸ்ட் கட்சி வேட்பாளர் செல்ல சுவாமியை ஆதரித்து வாக்கு சேகரித்தார். நடைபெறக்கூடிய தேர்தல் டெல்லி அணி தமிழ்நாடு அணிக்கு இடையிலான தேர்தல் என்று தெரிவித்தார். டெல்லிய அணி வெற்றி பெறுகிறதா? தமிழ்நாடு அணி வெற்றி பெறுகிறதா? என்பதுதான் இந்த சட்டமன்றத் தேர்தல் என்றார். அதிமுக என்ற போர்வையில் தமிழ்நாட்டுக்குள் நுழைய பாஜக முயற்சிக்கிறது என்றும் தெரிவித்தார்.

இதையும் படிங்க: உதயநிதி டயப்பர் போட்ட காலத்தில் இபிஎஸ் MLA..! அண்ணாமலை விமர்சனம்..!

எடப்பாடி பழனிச்சாமி சசிகலா காலில் விழுந்து விழுந்தது தவறி கிடையாது என்றும் அவருடைய காளை வாரிவிட்டது தான் தவறு எனவும் விமர்சனம் செய்தார். தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியை உதயநிதி ஸ்டாலின் விமர்சித்து வருவது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. உதயநிதி டயப்பர் போட்ட காலத்திலேயே எடப்பாடி பழனிச்சாமி எம்எல்ஏவாக இருந்தார் என்றும் அவரது வார்த்தை சரியில்லை எனவும் நேற்று அண்ணாமலை விமர்சித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: கடும் வார்த்தை போர்..!! ஒரே ஃபிளைட்டில் பறக்கும் உதயநிதி - இபிஎஸ்..!! பின்னணி என்ன..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share