×
 

உதயநிதி சார்! சட்டம் ஒழுங்கே ICU-ல தான் இருக்கு… அதிமுக செம கலாய்..!

தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கே ICU- வில் இருப்பதாக உதயநிதி ஸ்டாலினுக்கு அதிமுக பதிலடி கொடுத்துள்ளது.

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அதிமுக குறித்து பேசிய கருத்துகள் விவாத பொருளாக அமைந்துள்ளன. சைதாப்பேட்டையில் 28.75 கோடி ரூபாய் செலவில் நவீன மருத்துவ உபகரணங்களுடன் கட்டப்பட்ட புதிய அரசு மருத்துவமனையை திறந்து வைத்து உரையாற்றிய உதயநிதி ஸ்டாலின், அதிமுகவை கடுமையாக விமர்சித்தார். அவர், விரைவில் அதிமுக ஆம்புலன்ஸில் செல்லக்கூடிய நிலைமையை தமிழ்நாட்டு மக்கள் ஏற்படுத்துவார்கள்.

அதிமுகவை தீவிர சிகிச்சைப் பிரிவில் (ஐசியூ) அனுமதிக்க வேண்டிய நிலை ஏற்படும் என்று கூறி, கட்சியின் உட்கட்சிப் பூசலையும், பொதுமக்களிடையே அதற்கு எதிரான கருத்துகளையும் கிண்டலடித்தார். இந்தக் கருத்து, அரசியல் வட்டாரங்களில் கடும் விவாதத்தைத் தூண்டியுள்ளது. உதயநிதியின் இந்தப் பேச்சு, அதிமுகவின் தற்போதைய உட்கட்சி பிரச்சினைகளை மையப்படுத்தியது. அதிமுகவில் அண்மையில் மீண்டும் உட்கட்சிப் பூசல் தலைதூக்கியுள்ளது.

முன்னாள் முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் மற்றும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் ஆகியோரின் நடவடிக்கைகள், கட்சியில் ஒற்றுமையின்மையை வெளிப்படுத்தியுள்ளன. செங்கோட்டையன், கட்சியில் இருந்து பிரிந்தவர்கள் மீண்டும் ஒன்றிணைய வேண்டும் என்று கூறி, அதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்திருந்தார். இதற்கு பதிலளிக்கும் வகையில், எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையனை கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் நீக்குவதாக அறிவித்தார். இத்தகைய உட்கட்சி மோதல்களை உதயநிதி தனது பேச்சில் குறிப்பிட்டு, அதிமுகவின் அரசியல் எதிர்காலம் பலவீனமாக உள்ளதாக விமர்சித்தார்.

இதையும் படிங்க: திமுக, அதிமுகவுக்கு இடையில நீ யாரு.... வார்த்தையை விட்ட விஜயை வச்சி செய்த எடப்பாடி பழனிசாமி...!

இதனிடையே, தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்றும் சட்டம் ஒழுங்கு சந்தி சிரிப்பதாகவும் தொடர்ந்து அதிமுக விமர்சித்து வருகிறது. உதயநிதி ஸ்டாலினின் பேச்சு தற்போது கடும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நிலையில், தமிழநாட்டின் சட்டம் ஒழுங்கே ICU-வில் தான் இருப்பதாக அதிமுக கடுமையாக விமர்சித்துள்ளது.

இதையும் படிங்க: ஆஹா! இது நம்ப லிஸ்ட்லயே இல்லயே... செங்கோட்டையனுக்கு பரிவட்டம் கட்டி குஷியை வெளிப்படுத்திய OPS ஆதரவாளர்கள்

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share