×
 

விவசாயிகளுக்கு நிதி இல்லை! எம்.எல்.ஏ.க்களுக்கு கார் மட்டும் எப்படி? தவெக அரசை விளாசிய உதயநிதி!

தவெக ஆட்சியில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். விவசாய பயிர்க்கடனை தள்ளுபடி செய்ய நிதி இல்லை என தவெக அரசு கூறுகிறது.

தஞ்சாவூர்: தஞ்சாவூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தமிழக வெற்றிக் கழக அரசை கடுமையாக விமர்சித்தார். விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு தீர்வு காண நிதி இல்லை எனக் கூறும் அரசு, எம்.எல்.ஏ.க்களுக்கு கார் வழங்க மட்டும் நிதி வைத்திருப்பதாக அவர் கேள்வி எழுப்பினார்.

திருமண நிகழ்ச்சியில் மணமக்களை வாழ்த்திய உதயநிதி ஸ்டாலின், தொடர்ந்து அரசியல் விவகாரங்கள் குறித்து பேசினார். தவெக ஆட்சியில் விவசாயிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். விவசாயிகளின் பயிர்க்கடன்களை தள்ளுபடி செய்வதற்கு நிதி இல்லை என அரசு கூறுவதாகவும் அவர் விமர்சித்தார்.

வறட்சி நிவாரணம் கோரி விவசாயிகள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வரும் நிலையில், அவர்களின் கோரிக்கைக்கு அரசு இதுவரை உரிய பதில் அளித்துள்ளதா என்றும் உதயநிதி கேள்வி எழுப்பினார். விவசாயிகளுக்கு வழங்க நிதி இல்லை எனக் கூறும் அரசு, சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்க மட்டும் நிதி ஒதுக்குவது எப்படி என்றும் அவர் கேள்வி எழுப்பினார்.

இதையும் படிங்க: செக் வைத்த மு.க.ஸ்டாலின்! திமுகவில் வயது உச்சவரம்பு தீர்மானம்!! பதவி பறிபோகும் சீனியர்கள் யார்? யார்? முழு விவரம்!

மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்கொள்ளும் பிரச்சினைகள் குறித்து சட்டசபையில் கேள்விகள் எழுப்பப்பட்டாலும், அதற்கு உரிய பதில் கிடைப்பதில்லை எனவும் உதயநிதி குற்றம்சாட்டினார். முதலமைச்சர் நேரடியாக பதில் அளிக்காமல் இருப்பதாகவும், சில அமைச்சர்கள் கேட்கப்படும் கேள்விகளுக்கு சம்பந்தமில்லாத பதில்களை அளிப்பதாகவும் அவர் விமர்சித்தார்.

தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை தவெக அரசு நிறைவேற்றவில்லை என்றும் உதயநிதி கூறினார். தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாக கேள்வி எழுப்பும்போது, முந்தைய ஆட்சி அரசின் கஜானாவை காலி செய்துவிட்டு சென்றதாக அமைச்சர்கள் கூறுவதாக அவர் தெரிவித்தார்.

மக்கள் சந்திக்கும் உண்மையான பிரச்சினைகளுக்கு பதில் அளிப்பதற்கு பதிலாக, பிரச்சினைகளை திசை திருப்பும் வகையில் அமைச்சர்களின் பதில்கள் இருப்பதாகவும் உதயநிதி குற்றம்சாட்டினார். விவசாயிகள், பொதுமக்கள் மற்றும் சட்டசபை தொடர்பான பல்வேறு விவகாரங்களில் தவெக அரசின் செயல்பாடுகள் குறித்து அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

தொடர்ந்து பேசிய உதயநிதி, தவெக ஆட்சியின் செயல்பாடுகளுக்கு எதிர்காலத்தில் மக்கள் உரிய பாடம் புகட்டுவார்கள் என தெரிவித்தார். அவரது இந்த பேச்சு தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க: பழைய முகங்களுக்கு குட்பை சொல்லுங்கள்! இனி தயக்கம் வேண்டாம்!’ ஸ்டாலினுக்கு திமுக நிர்வாகிகள் கடிதம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share