குழந்தைகளை தாக்குவதற்கு தாய்மாமன் தடியடி திட்டமா.? சொல்லுங்க CM..! உதயநிதி விமர்சனம்..!
தமிழக வெற்றிக்கழக அரசிற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி பல்வேறு கேள்விகளை முன் வைத்தார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், பணி நிரந்தரம் மற்றும் சம வேலைக்குச் சம ஊதியம் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராடும் செவிலியர்கள் மீது காவல்துறையினரை ஏவி கண்மூடித்தனமாக தாக்குதல் நடத்தியுள்ள அரசை வன்மையாக கண்டித்துள்ளார். எதிர்க்கட்சியாக இருந்த போது ஆட்சிக்கு வந்த முதல் நாளிலேயே செவிலியர்களை பணி நிரந்தரம் செய்வோம் என்று உறுதியளித்த இன்றைய ஆட்சியாளர்கள், இப்போது செவிலியர் போராட்டத்திற்கு முதலில் காவல்துறையை அனுப்பி அராஜகம் செய்கின்றனர் என்று அவர் குற்றம்சாட்டினார்.
போராட்டக்களத்தில் செவிலியர்களை சிறிய இடத்தில் அடைத்து, மின்சாரத்தை நிறுத்தி, உயிர் வேண்டுமா வேண்டாமா என்று மிரட்டுவது போன்ற அத்துமீறல்களை ஒருபுறம் மேற்கொள்ளும் அரசு, மறுபுறம் அபியூசிவ் வாரியர்ஸ் மூலம் செவிலியர்களையும் அவர்களின் போராட்டத்தையும் கொச்சைப்படுத்துவது அநாகரிகத்தின் உச்சம் என்று உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார்.
செவிலியர்கள் மீது சிறு கீறல் விழுந்தாலும் பொறுக்க மாட்டோம் என்று அன்றைக்கு பேசியவர்கள், இன்றைக்கு போராடும் செவிலியர்களை மட்டுமின்றி அவர்களின் குழந்தைகள் மீதும் தாக்குதல் நடத்துவது வெட்கக்கேடு என்று அவர் சுட்டிக்காட்டினார். குழந்தைகளைத் தாக்குவதற்கு பெயர் என்ன, தாய்மாமன் தடியடி திட்டமா என்று கேள்வி எழுப்பி உள்ளார்.
இதையும் படிங்க: குறைந்த விலைக்கு துவரம் பருப்பு கொள்முதல்... திமுகவே காரணம்... அடித்துச் சொல்லும் உதயநிதி..!!
பெட்டி வேட்பாளரின் போலிக் கண்ணீரைத் துடைப்பதற்காக நீளும் முதல்வரின் கரங்கள், உயிர்காக்கும் செவிலியர்களின் உண்மைக் கண்ணீரைத் துடைக்க மறுப்பது ஏன் என்றும் கேட்டார். செவிலியர்கள் மீதான அடக்குமுறையை உடனே நிறுத்தி, அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைக்க வேண்டும் என்றும், அவர்களின் கோரிக்கைகளைத் தீர்த்து வைப்பதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்றும் அரசை வலியுறுத்தினார் உதயநிதி ஸ்டாலின்.
இதையும் படிங்க: 'அவர் சாதாரண பல்டி பாமா இல்ல.. அந்தர் பல்டி பாமா'..!! சத்யபாமாவை வம்புக்கிழுத்த உதயநிதி ஸ்டாலின்..!!