விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா.? சர்க்கஸ் அரசாங்கம்...! உதயநிதி காட்டம்.!!
விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா என உதயநிதி ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார்.
எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தற்போதைய அரசின் விவசாயக் கொள்கைகளை கடுமையாக விமர்சித்துள்ளார். விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிப்பதா என்ற கேள்வியை எழுப்பிய அவர், டெல்டா மாவட்டங்களில் சம்பா பயிரைக் காப்பாற்ற முடியுமா என்ற அச்சத்தில் விவசாயிகள் தவித்து வருவதாகக் குறிப்பிட்டார்.
குறுவை சாகுபடிக்கு திறக்க வேண்டிய நேரத்தில் மேட்டூர் அணையை திறக்காமல் விவசாயிகளை வஞ்சித்ததாக முதலமைச்சரை குற்றம்சாட்டிய உதயநிதி, சம்பா சாகுபடிக்கு அணையின் நீர்மட்டம் உயர்ந்த பிறகு செப்டம்பர் இறுதியில் தண்ணீர் திறந்துவிட வேண்டும் என்று விவசாயிகள் வலியுறுத்தியதை ஏற்காமல், வெற்று விளம்பரத்துக்காக செப்டம்பர் 1-ஆம் தேதியே அணையைத் திறந்து வைத்ததாகத் தெரிவித்தார்.தற்போது அணைக்கான நீர்வரத்து 4,000 கன அடியாகக் குறைந்துவிட்ட நிலையில், அணையின் நீர் மட்டமும் 40 அடியை நோக்கி குறைந்து கொண்டிருப்பதாக அவர் சுட்டிக்காட்டினார்.
இதனால் கடைமடை வரை தண்ணீர் சேருவதும், பயிரின் பூப்பு நேரத்தில் தண்ணீர் கிடைப்பதும் சந்தேகமே என்பதால், சம்பா சாகுபடியை திட்டமிட்டபடி மேற்கொள்ள முடியாது என்று விவசாயிகள் வேதனை தெரிவிப்பதாக உதயநிதி கூறினார்.குறுவை சிறப்புத் தொகுப்புக்கும் வறட்சி நிவாரணத்துக்கும் உள்ள வித்தியாசத்தைக் கூட புரிந்துகொள்ளாமல் பேசிய முதலமைச்சர், விவசாயிகளின் அவலநிலையை உணரத் தவறிவிட்டதாக அவர் விமர்சித்தார். ஆற்றுப்பாசனத்தை நம்பி சம்பா சாகுபடியில் இறங்க வேண்டாம் என்று வேளாண் வல்லுநர்கள் கூறும் அளவுக்கு நிலைமையை மோசமாக்கியுள்ளதாக இந்த அரசைச் சாடினார் உதயநிதி.
இதையும் படிங்க: விறுவிறு இடைத்தேர்தல்... வரும் 26 முதல் உதயநிதி சூறாவளி பிரச்சாரம்..! வெற்றி வசமாகுமா.?
அடுத்த ஜென்மத்தில் விவசாயியாகப் பிறப்பேன் என்று வெற்று வசனங்களைப் பேசிய முதலமைச்சருக்கு, முழுப் பயிர்க்கடன் கேட்டுப் போராடும் விவசாயிகளைச் சந்திக்கக்கூட மனம் வரவில்லை என்று சுட்டிக்காட்டிய அவர், திருச்சியில் போராடிய விவசாயிகளிடம் ஐந்து நிமிடம் மட்டுமே அதிகாரத் திமிரோடு பேசிவிட்டுச் சென்ற அமைச்சர்களைக் கண்டித்தார். அதற்கு ஒரு போராட்டம் நடத்தும் அளவுக்குத்தான் இந்த அரசு இருக்கிறது என்று அவர் கடுமையாக விமர்சித்தார்.விளம்பரத்திற்காக விவசாயிகளை வஞ்சிக்காமல், வேளாண் பெருங்குடி மக்களுக்கு வறட்சி நிவாரணத்தையும் முழுப் பயிர்க்கடன் தள்ளுபடியையும் இந்த அரசு உடனடியாக வழங்க வேண்டும் என்று உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: அடுத்தடுத்த இரட்டைக் கொலைகள்..! இழப்பீடும், நீதியும் எங்கே.? குரல் கொடுத்த உதயநிதி..!