×
 

"வறண்டு கிடக்குது காவிரி... ஜோக்கர் கூட்டமான அமைச்சரவை"..! உதயநிதி கடும் குற்றச்சாட்டு..!!

தஞ்சையில் திமுக சார்பில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் உதயநிதி ஸ்டாலின் உரையாற்றினார்.

தஞ்சாவூர் நகரில் இன்று காலை திமுக சார்பில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பனகல் கட்டிடம் அருகே நடந்த இந்த ஆர்ப்பாட்டத்தில் காவிரி டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த கட்சி நிர்வாகிகள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள், இளைஞர் அணி உள்ளிட்ட துணை அமைப்புகளின் உறுப்பினர்கள் மற்றும் விவசாயச் சங்கங்களைச் சேர்ந்தவர்கள் பெருமளவில் கலந்துகொண்டனர். 

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ஆடிப்பெருக்கு தினத்தில் காவிரி வறண்டு போய் இருப்பதாக குற்றம் சாட்டினார். நிர்வாகத் திறனற்ற அரசாக தமிழக வெற்றி கழக அரசு இருப்பதாக தெரிவித்தார். குருவை சாகுபடி முழுவதுமாக பொய்த்து போய்விட்டது என்று தெரிவித்தார். ஆகஸ்ட் மாதம் வந்துவிட்டது என்றும் இதுவரை காவிரி நீர் வந்து சேரவில்லை என்றும் தெரிவித்தார்.

ஆட்சி அமைத்து மூன்று மாதங்கள் ஆகியும் முதல்வர் வாயிலிருந்து பாஜக என்ற வார்த்தை வரவில்லை என்ற குற்றம் சாட்டிய உதயநிதி ஸ்டாலின், மகாராஷ்டிராவில் தமிழக விவசாயிகள் துரத்தியடிக்கப்பட்ட பின் முதல்வர் விஜய் வாய் திறக்கவில்லை என்றும் தெரிவித்துள்ளார். கர்நாடகா செல்வதாக நாடக ஒன்றை முதல்வர் விஜய் ஆடியதாகவும் அரை நூற்றாண்டுகளாக நடைபெறும் சட்டப் போராட்டம் என்பதால் கர்நாடகா செல்ல வேண்டாம் என்ற முதலமைச்சர் கூறினோம் எனவும் தெரிவித்துள்ளார். 

இதையும் படிங்க: "தாரைவார்க்கப்படும் காவிரி உரிமை"..! அனைத்துக் கட்சிக் கூட்டம் எப்போது.? உதயநிதி தலைமையில் திமுகவினர் ஆர்ப்பாட்டம்..!!

மத்திய அரசை பகைத்தால் பிரச்சனை வரும் என்பதால் பாஜக என்ற பெயரை உச்சரிக்காத அளவு தைரியசாலி தமிழக வெற்றி கழகம் என்றும் முதல்வர் விஜயை பார்க்கச் சென்ற விவசாயிகளை குண்டுகட்டாக தமிழக அரசு கைது செய்யப்பட்டதாகவும் தெரிவித்துள்ளார். மகாராஷ்டிரா நாக்பூரில் ரயிலில் இருந்து விவசாயிகள் பாதியில் இறக்கிவிடப்பட்ட சம்பவம் குறித்து முதல்வர் விஜய் வாய் திறக்காதது ஏன் என்றும் கேள்வி எழுப்பினார். மொத்த ஜோக்கர் கூட்டமாக தமிழக அமைச்சரவை அமைந்துள்ளது என்றும் கழிவறையை கூட விடாமல் ரீல்ஸ் எடுத்து போட்டுக் கொண்டிருக்கிறார்கள் எனவும் தெரிவித்த உதயநிதி ஸ்டாலின், செய்தியாளர்களை பார்த்ததும் திருடனைப் போல ஓடுகிறார் நீர்வளத்துறை அமைச்சர் என்றும் குற்றம் சாட்டினார். 

இதையும் படிங்க: நல்லகண்ணு சிலை திறப்பு விழா... இடதுசாரிகளுடன் இணைந்து போராடுவோம்..! உதயநிதி உறுதி..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share