×
 

எங்கள ஓடாதீங்கன்னு சொன்னீங்க.. இப்ப நீங்களே ஓடுறீங்களே!! CM விஜய்யை கலாய்த்த உதயநிதி!!

அதேபோல் தவெக நிர்வாகிகள் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக சட்டசபையில் இன்று காவல் துறை, தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் தொடர்பான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது. இதில் எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், தவெக ஆட்சிப் பொறுப்பேற்ற 116 நாட்களில் மாநிலத்தில் நடைபெற்ற கொலை, கொள்ளை, ஆணவக் கொலை மற்றும் பாலியல் குற்றங்களின் நீண்ட பட்டியலை வாசித்துக் காட்டினார். அதேபோல் தவெக நிர்வாகிகள் மீது எழுந்துள்ள பாலியல் குற்றச்சாட்டுகளையும் அவர் சுட்டிக்காட்டினார்.

மேலும் அவர், “திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று குற்றம்சாட்டியவர்கள், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறையில் பணியாற்றிய மகேஷ்குமார் அகர்வாலை ஏன் டிஜிபியாக நியமித்தீர்கள்? போதைப்பொருள் தடுப்புப் பிரிவில் சிறப்பாகப் பணியாற்றிய அமல்ராஜை சென்னை காவல் ஆணையராக்கியது ஏன்? நாங்கள் நியமித்த அதிகாரிகள்தான் திறமையாகச் செயல்பட்டதால் அவர்களுக்குப் பதவி உயர்வு அளித்தீர்களா?” என்று கேள்வி எழுப்பினார்.

இதற்குப் பதிலளிக்கும் விதமாக முதலமைச்சர் விஜய், “அனைத்து எம்.எல்.ஏ.க்களும் எழுப்பும் கேள்விகளுக்கு வரும் திங்கள்கிழமை பதிலளிப்பேன். நான் அவையில் இல்லாவிட்டாலும் கேள்விகள் என்னைச் சென்றடையும். ஆனால் நான் பதிலளிக்கும்போது யாரும் எழுந்து ஓடிவிடக் கூடாது என்பதை உறுதியளிக்க வேண்டும்” என்று கூறிவிட்டு அவையை விட்டு வெளியேறினார்.

இதையும் படிங்க: “சட்டமன்றம் ஜால்ரா மன்றமாகிவிட்டது...” - மதுரை மண்ணில் நின்று விஜய் அரசை விளாசித் தள்ளிய ஆர்.பி.உதயகுமார்...!

உடனே உதயநிதி ஸ்டாலின் கிண்டலாக, “எங்களை வெளியே ஓடக் கூடாது என்று சொல்லிவிட்டு, தற்போது அவரே வேகமாக வெளியேறிவிட்டாரே” என்றார். மேலும் அவர், “மூன்று நாட்கள் விடுமுறை உள்ளது. நன்கு தயாராகி வந்து, திசைதிருப்பும் குட்டிக்கதைகள் இல்லாமல் நேரடியாகப் பதில் அளியுங்கள்” என்று கூறினார். 

இதற்கிடையே முதலமைச்சர் விஜய் காவல்துறை தொடர்பான முக்கிய அறிவிப்புகளை வெளியிட்டார். அடுத்த ஐந்து ஆண்டுகளில் 29,108 கூடுதல் காவல் பணியிடங்கள் உருவாக்கப்படும். 2026-இல் 10,000 காவலர்கள் நியமிக்கப்படும்போது அதில் 5,000 பேர் பெண்களாக இருப்பர். போதைப்பொருள் ஒழிப்புக்காக 50 கிராமங்களுக்கு தலா ரூ.10 லட்சம் வழங்கப்படும். காவல்துறை நவீனமயமாக்கலுக்கு ரூ.212 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

காவல் நிலையங்களின் சில்லறைச் செலவினம் உயர்த்தப்படும். பணியில் துணிச்சலுடன் இறக்கும் காவலருக்கு ரூ.1 கோடி வழங்கப்படும். பணியில் இறக்கும் காவலர்களின் குடும்பங்களுக்கு வழங்கப்படும் கருணைத் தொகை ரூ.20 லட்சத்திலிருந்து ரூ.30 லட்சமாக உயர்த்தப்படும். வண்டலூர் காவல் அகாதெமியில் ரூ.23 கோடியில் விளையாட்டு வசதிகள் அமைக்கப்படும். சேலம் மற்றும் விழுப்புரத்தில் ரூ.14 கோடியில் மரபணு ஆய்வு மையங்கள் நிறுவப்படும். மேலும் ரூ.200 கோடியில் புதிய வாகனங்கள் வாங்கப்படும் என்று அறிவித்தார்.

இதையும் படிங்க: ”நடிகன் அவன்.. அப்படி என்ன சாதிச்சான்...” - சி.எம்.விஜய்யை ஒருமையில் விளாசிய செல்லூர் ராஜு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share