×
 

"பதிலடி என்றால் இப்படித்தான் இருக்கும்!" - பாகிஸ்தானை எச்சரித்த ராஜ்நாத் சிங்!

கார்கில் போர் வெற்றி விழாவில் பேசிய பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங், பாகிஸ்தானின் ஒவ்வொரு அத்துமீறலுக்கும் கற்பனை செய்ய முடியாத அளவுக்கு இந்தியா பதிலடி கொடுக்கும் என எச்சரித்துள்ளார்.

பாகிஸ்தான் இனி எல்லைப் பகுதியில் சிறிதளவு அத்துமீறலில் ஈடுபட்டாலும், அந்த நாடு கற்பனை செய்து பார்க்க முடியாத அளவிற்கு இந்தியா மிகக் கடுமையான பதிலடியைக் கொடுக்கும் எனப் பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.

27-வது கார்கில் விஜய் திவாஸ் (Kargil Vijay Diwas) வெற்றி விழாவை முன்னிட்டு லடாக்கில் உள்ள திராஸ் கார்கில் போர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்திய பின்னர், பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் செய்தியாளர்கள் மற்றும் ராணுவ வீரர்கள் மத்தியில் உரையாற்றினார். அப்போது பாகிஸ்தானின் எல்லைத் தாண்டிய பயங்கரவாத நடவடிக்கைகளைக் கடுமையாகச் சாடிய அவர், "பாகிஸ்தானுடன் பயங்கரவாதமும் பேச்சுவார்த்தையும் ஒரே நேரத்தில் பயணிக்க முடியாது.

 இனி அண்டை நாட்டுடன் எந்தவிதப் பேச்சுவார்த்தையும் கிடையாது; ஒருவேளை எதிர்காலத்தில் பேச்சுவார்த்தை என்று ஒன்று நடப்பதாக இருந்தால், அது பாகிஸ்தான் ஆக்கிரமித்துள்ள காஷ்மீரை (POK) மீட்டெடுப்பது குறித்து மட்டுமே இருக்கும்" எனத் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: வணிகங்கள் செழிக்கும், புத்தாக்கம் வளரும்! நியூசிலாந்து வர்த்தக மாநாட்டில் பிரதமர் மோடி பெருமிதம்!

தொடர்ந்து பேசிய அவர், இந்தியப் படைகளின் வீரம் மற்றும் தியாகத்தைப் போற்றும் வகையில் அமைந்த கார்கில் வெற்றி நாள், நாட்டின் பாதுகாப்பில் நாம் என்றும் சமரசம் செய்ய மாட்டோம் என்பதற்கான சான்றாகும் என்றார். "பாகிஸ்தான் தனது எல்லை மீறும் நாசகார வேலைகளை உடனடியாக நிறுத்திக்கொள்ள வேண்டும். இந்திய ராணுவம் எப்போதும் விழிப்புடன் தயாராக இருக்கிறது. 

நாட்டின் இறையாண்மையை உரசிப் பார்க்க நினைத்தால் பாகிஸ்தான் சந்திக்கப்போகும் விளைவுகள் மிகக் கொடூரமாக இருக்கும்" என ராஜ்நாத் சிங் விடுத்த எச்சரிக்கை சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.

 


 

இதையும் படிங்க: இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில்! ஜூலை 17-ல் தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share