×
 

தமிழகத்திற்கு புதிய ரயில்வே திட்டங்கள்! சென்னையில் புல்லட் ரயில் குறித்து எல்.முருகன் முக்கிய அறிவிப்பு!

சென்னைக்கு விரைவில் புல்லட் ரயில் திட்டம் வரும் என்றும், தமிழகத்தில் பல்வேறு ரயில்வே திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார்.

சென்னையில் இருந்து புல்லட் ரயில் திட்டம் விரைவில் பயன்பாட்டுக்கு வரவுள்ளது என்றும், தமிழகத்தின் ரயில்வே கட்டமைப்பை மேம்படுத்தப் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு மகத்தான திட்டங்களை விரைந்து செயல்படுத்தி வருகிறது என்றும் மத்திய தகவல் ஒலிபரப்பு மற்றும் நாடாளுமன்ற விவகாரங்கள் துறை இணை அமைச்சர் எல். முருகன் தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்தநாளையொட்டி, சென்னை திருமங்கலத்தில் பாஜக சார்பில் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி மிக விமரிசையாக நடைபெற்றது. இதில் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்ட மத்திய இணை அமைச்சர் எல். முருகன், தொண்டர்களுக்கும் பொதுமக்களுக்கும் தனது திருக்கரங்களால் அன்னதானம் வழங்கினார்.

இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களைச் சந்தித்த மத்திய இணை அமைச்சர் எல். முருகன், குஜராத் முதலமைச்சராக 13 ஆண்டுகளும், நாட்டின் பிரதமராக 12 ஆண்டுகளும் எனத் தனது வாழ்வின் 25 ஆண்டுகளைத் தன்னலமற்ற மக்கள் சேவைக்காக அர்ப்பணித்த மாபெரும் தலைவர் பிரதமர் மோடி ஆவார். குஜராத் முதல்வராக இருந்தபோது மாசடைந்த சபர்மதி ஆற்றைச் சுத்தப்படுத்திப் புதுப்பித்ததோடு, குடிநீர் தட்டுப்பாட்டைப் போக்கி விவசாயத்திற்கும் தடையின்றித் தண்ணீர் வழங்கிப் புரட்சி செய்தவர் அவர் என்று நினைவுகூர்ந்தார்.

இதையும் படிங்க: உண்மையான உழைப்பு... அசைக்க முடியாத அர்ப்பணிப்பு... பிரதமர் மோடிக்கு EPS பிறந்தநாள் வாழ்த்து..!!

தொடர்ந்து மத்திய அரசின் சாதனைகளைப் பட்டியலிட்ட அவர், பிரதமராகப் பொறுப்பேற்ற பிறகு அவர் முன்னெடுத்த வரலாற்றுச் சிறப்புமிக்க நலத்திட்டங்களால் இன்று நாடு முழுவதும் 25 கோடி மக்கள் வறுமைக் கோட்டிற்கு மேலே உயர்ந்துள்ளனர். உலகப் பொருளாதாரக் களத்தில் இந்தியா இன்று 4-வது பெரிய பொருளாதார நாடாகத் தலைநிமிர்ந்து நிற்கக் காரணமும் அவரே ஆவார். 

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக மத்திய அரசு எப்போதும் முன்னுரிமை அளித்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் இருந்து விரைவில் புல்லட் ரயில் இயக்கப்பட உள்ளதுடன், தமிழகத்தின் பிற பகுதிகளுக்கும் நவீன ரயில்வே திட்டங்கள் தொடர்ந்து விரிவுபடுத்தப்பட்டு வருகின்றன. பிரதமரின் பிறந்தநாள் விழா தமிழகம் முழுவதும் தொடர்ந்து ஒரு மாத காலம் மக்கள் நலச் சேவைகளுடன் கொண்டாடப்படும் என்று தெரிவித்தார்.

இதையும் படிங்க: மகளிர் டி20 ஆசிய கோப்பை... சாதித்த இந்திய அணி..! புகழ்ந்த தள்ளிய பிரதமர் மோடி..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share