×
 

காமராஜர் பல்கலை. ஊழல் விவகாரம்... சிபிஐ விசாரிக்க அதிரடி ஆணை..!!

காமராஜர் பல்கலைக்கழக ஊழல் குற்றச்சாட்டுகளை சிபிஐ விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டுகள் குறித்து சிபிஐ விசாரிக்க உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. பல்கலைக்கழகத்தில் நடந்த ஊழல் குற்றச்சாட்டு குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணை நடத்த கோரி வெங்கடேசன் என்பவர் தொடர்ந்த வழக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

லஞ்ச ஒழிப்புத்துறையில் முறையாக புகார் அளித்தம் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மதுரை உயர்நீதிமன்ற கிளையில் மனுதாரர் புகார் தெரிவித்தார். மனுதாரர் லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கோரிய நிலையில் சிபிஐ விசாரணைக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. சட்டவிரோதமாக சான்றிதழ் வழங்கியது, ஆய்வு மற்றும் இணைப்பு வழங்க லஞ்சம் பெற்றதாக கோமதி என்ற பல்கலைக்கழக ஊழியர் மீது புகார் கொடுக்கப்பட்டது.

2013ல் காமராஜர் பல்கலைக்கழகத்தில் எழுத்தராக பணியில் சேர்ந்த கோமதி தனது செல்வாக்கின் மூலம் கண்காணிப்பாளராக உயர்ந்தார் என்று மனுதாரர் தரப்பில் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. பணியில் சேர்ந்த சில ஆண்டில் கோமதி 2 கோடி ரூபாய்க்கு வீடும் பல்கலைக்கழக ஊழியர்களுக்கு இரண்டு கோடி ரூபாய் அளவிற்கு கடனும் கொடுத்திருப்பதாக மனுதாரர் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: தொகுதி பங்கீடு!! திமுக கொடுத்த லாஸ்ட் ஆப்சன்!! காங்கிரசுக்கான தொகுதிகள் எது?! லிஸ்ட் ரெடி?!

லஞ்ச ஒழிப்புத் துறையில் கடந்த ஆண்டு புகார் அளித்தும் இதுவரை நடவடிக்கை எடுக்காததால் வழக்கு தொடுத்து இருப்பதாக மனுதாரர் வெங்கடேசன் கூறினார். இந்த நிலையில் இந்த வழக்கை சிபிஐ விசாரிக்க பிறப்பிக்கப்பட்டதுடன் லஞ்ச ஒழிப்புத்துறை போன்ற அமைப்புகள் தங்கள் கடமையை முறையாக செய்யாத போது வேறு அமைப்புக்கு மாற்றுவது தேவையாகிறது என்று நீதிமன்றம் தெரிவித்தது. 

இதையும் படிங்க: உதவி தொகையாக மாறியது கருணை தொகை! தேர்தல் விதிமீறல் வருமாம்!! இரவோடு இரவாக பெயரை மாற்றிய அதிமுக!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share