பாதுகாப்பு வளையத்தை தாண்டி குதித்த மர்ம நபர் ... சூலூர் விமானப் படை தளத்தில் பரபரப்பு!!
சூலூர் விமானப் படை தளத்தின் காம்பவுண்ட் சுவரை மர்ம நபர் ஒருவர் ஏறிக்குதித்து உள்ளே நுழைந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கோவை மாவட்டம் சூலூரில் மத்திய அரசுக்கு சொந்தமான விமானப்படைத் தளம் அமைந்துள்ளது. இந்த விமானபடை தளம் அதிநவீன பாதுகாப்பு வளையங்களை கொண்டுள்ளது. மேலும் இங்கு இரண்டடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த நிலையில் இந்த விமானப் படை தளத்தின் காம்பவுண்ட் சுவரை மர்ம நபர் ஒருவர் ஏறிக்குதித்து உள்ளே நுழைந்துள்ளார்.
இரண்டடுக்கு பாதுகாப்புடன் திகழும் இந்த முக்கியத்துவம் வாய்ந்த தளத்தில், நேற்று மாலை சுமார் 7 மணியளவில் இந்த அத்துமீறல் சம்பவம் அரங்கேறியுள்ளது. பாதுகாப்பு பணியில் இருந்த விமானப்படை அதிகாரிகள் உடனடியாக அந்த நபரை மடக்கிப் பிடித்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையின் முடிவில், பிடிபட்ட நபர் சூலூர் காவல் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க: பாகிஸ்தானின் ஆணிவேரில் தாக்கிய இந்தியா..! விமானத் தளங்கள் மீது குண்டுவீச்சு..!
இந்த சம்பவம் குறித்து சூலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மர்ம நபர் எதற்காக விமானப்படை தளத்திற்குள் அத்துமீறி நுழைந்தார் என்பது குறித்து பல்வேறு கோணங்களில் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய விமானப்படையின் ஒரு விமானபடைத் தளமாக சூலூர் விமானப்படை தளம் திகழ்கிறது. தமிழ்நாட்டின் கோயம்புத்தூர் அருகே சூலூரில் இந்த விமானப்படை தளம் அமைந்துள்ளது. இது தெற்கு விமானக் கட்டளையால் இயக்கப்படுவதோடு ஹிண்டன் விமானப்படை நிலையத்திற்குப் பிறகு இந்திய விமானப்படையின் 2வது பெரிய விமானத் தளமாக விளங்குகிறது.
இதையும் படிங்க: சீறிப்பாய்ந்த ஏவுகணை..! 100 சதவீதம் தயார் நிலையில் இந்தியா..!