×
 

உ.பி.யில் இளம்பெண்ணுக்கு நேர்ந்த கொடூரம்.. ஊசிப்போட்டு வன்கொடுமை செய்யப்பட்ட பயங்கரம்..!

உத்தர பிரதேசத்தில் சிகிச்சைக்காக சென்ற இளம் பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

உத்திரபிரதேசத்தில் சிகிச்சைக்காக சென்ற இளம் பெண்ணை நோய்க்கான ஊசி எனக்கோரி ஊழியர் ஒருவர் மயக்க ஊசி போட்டு பாலியல் வன்கொடுமை செய்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக போலீசார் சாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்திரபிரதேசத்தின் பல்ராம்பூர் பகுதியில் செயல்பட்டு வரும் தனியார் மருத்துவமனை ஒன்றில் 28 வயது இளம்பெண் ஒருவர் சிகிச்சைக்காக சென்று உள்ளார். அங்கு பணிபுரியும் யோகேஷ் பாண்டே என்ற ஊழியர் நோய்க்கான ஊசி என பொய் சொல்லி அந்தப் பெண்ணுக்கு மயக்க ஊசியை செலுத்தியதாக தெரிகிறது. பிறகு மயக்கமடைந்த அந்தப் பெண்ணை ஊழியர் பாலியல் வன்கொடுமை செய்ததாக கூறப்படுகிறது.

தொடர்ந்து மயக்கம் தெளிந்த பிறகு தனக்கு நேர்ந்த கொடுமையை அந்தப் பெண் உணர்ந்து உள்ளார். பின்னர் அந்த இளம்பெண் போலீசில் தனக்கு நேர்ந்த கொடூரத்தை சொல்லி புகார் அளித்துள்ளார். இதனை அடுத்து போலீசார் வழக்கு பதிவு செய்து மருத்துவமனை ஊழியர் யோகேஷ் பாண்டே என்பவரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இதையும் படிங்க: சூடுபிடிக்கும் ஆரம்பாக்கம் சிறுமி பாலியல் வழக்கு.. தாபாவில் போலீசார் ஆய்வு.. சிக்கிய தடயங்கள்..!!

சிகிச்சைக்காக சென்ற இளம் பெண்ணை மயக்க ஊசி செலுத்தி பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. உத்தரபிரதேசத்தில் 2019ஆம் ஆண்டில், இந்தியாவில் பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகள் மொத்தம் 4,05,861 ஆக பதிவாகியுள்ளன. இதில் உத்தரப் பிரதேசம் 59,583 வழக்குகளுடன் முதலிடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

மேலும், உத்தரப் பிரதேசத்தில் பாலியல் வன்புணர்வு வழக்குகள் மட்டும் 3,065 ஆக பதிவாகியுள்ளதாக கூறப்பட்டு உள்ளது. இந்தியாவில் 2019இல் பெண்களுக்கு எதிரான குற்றங்களின் எண்ணிக்கை 2018ஐ விட 7.3% அதிகரித்துள்ளது, இதில் உத்தரப் பிரதேசம் முதன்மை மாநிலமாக உள்ளதாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: 21 மாணவிகளிடம் சில்மிஷ வேலையை காட்டிய 'சைன்ஸ் வாத்தி'.. பாய்ந்தது குண்டர் சட்டம்..!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share