×
 

மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி: சுருக்குமடி வலை விவகாரத்தில் திங்கட்கிழமை விசாரணை!

தமிழகத்தில் சுருக்குமடி வலைகளை பயன்படுத்த விதிக்கப்பட்டத் தடையை எதிர்த்துத் தொடரப்பட்ட வழக்கை அவசர வழக்காக விசாரிப்பதாக உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது.

சுருக்குமடி வலைகளைப் பயன்படுத்துவதற்குத் தமிழக அரசு விதித்துள்ளத் தடையை நீக்கக் கோரி "பிஷ்ஷர்மேன் கேர்" (Fisherman Care) அமைப்புத் தொடர்ந்த வழக்கு இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.

தமிழகத்தில் வரும் பிப்ரவரி 15-ஆம் தேதி முதல் மீன்பிடிக்காலம் தொடங்க உள்ளது. எனவே, மீனவர்களின் வாழ்வாதாரத்தைக் கருத்தில் கொண்டு இந்த விவகாரத்தில் நீதிமன்றம் உடனடி உத்தரவைப் பிறப்பிக்க வேண்டும்.

"மத்திய அரசு அமைத்த நிபுணர் குழு, சுருக்குமடி வலைகளால் கடல் வளத்திற்கோ அல்லது சுற்றுச்சூழலுக்கோ எந்தப் பாதிப்பும் இல்லை எனத் தனது அறிக்கையில் தெளிவுபடுத்தியுள்ளது. அந்த அறிக்கையை நீதிமன்றம் கவனத்தில் கொள்ள வேண்டும். வாதத்தைக் கேட்ட நீதிபதிகள், நிபுணர் குழுவின் அறிக்கை எங்கே? அதை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும்" என மத்திய அரசுக்குக் கேள்வி எழுப்பினர். இதற்குப் பதிலளித்த மத்திய அரசு வழக்கறிஞர், இந்த விவகாரம் தொடர்பாகத் கூடுதல் பிரமாணப் பத்திரத்தைத் நேற்றுதான் தாக்கல் செய்துள்ளோம்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: சிக்கந்தர் தர்காவில் தொழுகை.. வருஷத்துக்கு 2 முறை தான்..!! சுப்ரீம் கோர்ட் அதிரடி தீர்ப்பு..!!

மத்திய அரசு சமர்ப்பித்துள்ள அந்தப் கூடுதல் பிரமாணப் பத்திரத்தின் நகல்களைப் பிரதிவாதிகள் மற்றும் தொடர்புடைய அனைத்துத் தரப்பினருக்கும் வழங்க நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும், மீன்பிடிக்காலம் தொடங்க இருப்பதைச் சுட்டிக்காட்டி, இந்த வழக்கை அவசர வழக்காக (Urgent Matter) கருதி விசாரிப்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், விசாரணையை அடுத்த திங்கட்கிழமைக்கு (பிப். 16) ஒத்திவைத்தனர்.

தமிழகத்தில் பாரம்பரிய மீனவர்களுக்கும், விசைப்படகு மீனவர்களுக்கும் இடையே இந்தச் சுருக்குமடி வலைப் பயன்பாடு குறித்து நீண்டகாலமாகத் சர்ச்சை நீடித்து வரும் நிலையில், திங்கட்கிழமை நடைபெறவுள்ள விசாரணை மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
 

இதையும் படிங்க: இந்திய சட்டத்தை மதிக்காவிட்டால் நாட்டைவிட்டு வெளியேறு! மெட்டாவுக்கு உச்சநீதிமன்றம் கடும் எச்சரிக்கை!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share