போரை நிறுத்த ஈரானுடன் ரூ.3 ஆயிரம் கோடிக்கு டீல்?!! காசு கொடுத்து ஒப்பந்தம் கையெழுத்து?! அதிபர் பதில் என்ன?!
போர் நிறுத்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின்படி, ஈரானுக்கு அமெரிக்கா ரூ.3 ஆயிரம் கோடி வழங்குவதாக பரவும் செய்தி பொய் என அமெரிக்க அதிபர் டிரம்ப் திட்டவட்டமாக தெரிவித்தார்.
உலக நாடுகளை உலுக்கி, சர்வதேச எரிசக்தி சந்தையையே தலைகீழாக மாற்றிய அமெரிக்கா - ஈரான் இடையேயான 107 நாள் போர், ஒருவழியாக அமைதியை நோக்கி நகரத் தொடங்கியுள்ளது.
உலகப் பொருளாதாரத்திற்கு பெரும் முட்டுக்கட்டையாக இருந்த இந்த மோதலை முடிவுக்குக் கொண்டு வரும் வகையில், இரு நாடுகளுக்கும் இடையே வரும் 19ஆம் தேதி வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளது. இந்த ஒப்பந்தத்திற்குப் பிறகும், இறுதி மற்றும் விரிவான அமைதித் திட்டத்தை வகுப்பதற்காக அடுத்த 60 நாட்களுக்கு இரு தரப்பும் தொடர் பேச்சுவார்த்தையில் ஈடுபட உள்ளதாகத் தூதரக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச அளவில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள இந்த 14 அம்ச புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. அதன்படி, லெபனான் மீதான ராணுவ நடவடிக்கைகளை இரு நாடுகளும் கைவிடுவது, ஈரான் துறைமுகங்கள் மீது அமெரிக்க கடற்படை விதித்திருந்த கடுமையான முற்றுகையை உடனடியாகத் திரும்பப் பெறுவது மற்றும் உலகளாவிய கச்சா எண்ணெய் போக்குவரத்தின் முக்கியப் பாதையான ஹார்முஸ் ஜலசந்தியை மீண்டும் திறப்பது உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் இதில் இடம்பெற்றுள்ளன.
இதையும் படிங்க: நாளை 7 மாவட்டம்! நாளைமறுநாள் 12 மாவட்டம்! கொட்டித்தீர்க்க போகும் கனமழை! வானிலை எச்சரிக்கை!
இந்நிலையில், போரினால் பாதிக்கப்பட்ட ஈரானின் மறுசீரமைப்புப் பணிகளுக்காக அமெரிக்கா ரூ.3,000 கோடி நிதியுதவி வழங்க ஒப்புக்கொண்டுள்ளதாக இணையத்தில் ஒரு செய்தி காட்டுத்தீயாகப் பரவியது. இந்த விவகாரம் சர்வதேச அரங்கில் பெரும் விவாதத்தைக் கிளப்பிய நிலையில், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இதற்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.
இதுகுறித்து டிரம்ப் வெளியிட்டுள்ள எக்ஸ் (ட்விட்டர்) பதிவில், "ஈரான் தன்னிடம் அணு ஆயுதம் எதுவும் இல்லை என்பதை அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது. ஆனால், போர் நிறுத்த ஒப்பந்தத்தின்படி அமெரிக்கா ஈரானுக்கு ரூ.3,000 கோடி வழங்கப்போகிறது என்று வெளியாகும் தகவல் முற்றிலும் அஸ்திவாரமற்றது. இது தங்களுக்குச் சாதகமாக அரசியல் லாபம் தேட எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியினரால் திட்டமிட்டுப் பரப்பப்பட்ட அப்பட்டமான பொய் செய்தி (Fake News)" என்று மிகத் திட்டவட்டமாகக் குறிப்பிட்டுள்ளார்.
டிரம்பின் இந்த அதிரடி மறுப்பு, நிதியுதவி குறித்த வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ள போதிலும், இரு நாடுகளுக்கு இடையே கையெழுத்தாகவுள்ள அமைதி ஒப்பந்தம் உலகப் பொருளாதாரத்தையும், கச்சா எண்ணெய் சந்தையையும் மீண்டும் சீரமைக்கும் என்ற நம்பிக்கையை உலக நாடுகளிடையே ஏற்படுத்தியுள்ளது.
இதையும் படிங்க: விவசாயிகளை வஞ்சிக்கும் தவெக அரசு..! பயிர் கடன் தள்ளுபடியில் பல குளறுபடிகள்... EPS எதிர்ப்பு..!!