×
 

பிஞ்சு குழந்தைகளின் உயிரைக் குடித்த இருமல் மருந்து.. ம.பியில் பலி எண்ணிக்கை 14ஆக உயர்வு..!!

மத்தியப்பிரதேசத்தில் இருமல் மருந்து குடித்து பலியான குழந்தைகளின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது.

மத்தியப் பிரதேசத்தின் சிந்த்வாரா மாவட்டத்தில், கலப்படமான இருமல் மருந்து குடித்த குழந்தைகளின் இறப்பு எண்ணிக்கை 14ஆக உயர்ந்துள்ளது. இந்தப் சம்பவம், அரசு மருத்துவரின் குற்றச்சாட்டுக்குரிய விழிப்புணர்வின்மையும், தமிழ்நாட்டைச் சேர்ந்த உற்பத்தியாளரின் பொறுப்பின்மையும் காரணமாகக் கருதப்படுகிறது. இதனால், மாநில அரசு கடுமையான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

சிந்த்வாராவின் பரசியா பகுதியில், 5 வயது வரை உள்ள 9 குழந்தைகள், சளி மற்றும் காய்ச்சலுக்காக 'கோல்ட்ரிஃப்' (Coldrif) என்ற இருமல் மருந்தை குடித்த பிறகு தீவிரமான கிட்னி செயலிழப்பால் இறந்தனர். தமிழ்நாட்டின் காஞ்சிபுரத்தில் உள்ள ஸ்ரேசன் ஃபார்மாசூட்டிகல்ஸ் நிறுவனத்தால் உற்பத்தி செய்யப்பட்ட இந்த மருந்தில், 48.6% டயைத்திலீன் கிளைக்கால் (DEG) என்ற விஷப் பொருள் கலந்திருந்தது என, தமிழ்நாடு மருந்து பரிசோதனை ஆய்வக அறிக்கை உறுதிப்படுத்தியது. இந்த விஷம், குழந்தைகளின் குடல் மற்றும் சிறுநீரகங்களை சேதப்படுத்தி, உயிரிழப்புக்கு வழிவகுத்தது.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு Cough syrup கொடுக்கக்கூடாதா..?? மத்திய அரசின் அட்வைஸ் என்ன..??

இதுவரை 11 குழந்தைகள் உயிரிழந்த நிலையில், தற்போது மேலும் 3 குழந்தைகள் உயிரிழந்ததால் மொத்த இறப்பு 14ஆக உயர்ந்தது. இதோடு, 8 குழந்தைகள் நாக்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் உள்ளனர். மேலும் உயிரிழந்த குழந்தைகளின் குடும்பங்களுக்கு ரூ.5 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டுள்ளது. இதற்கிடையில், பரசியா அரசு மருத்துவமனை பீடியாட்ரிஷியன் மருத்துவர் பிரவீன் சோனி கைது செய்யப்பட்டார். "சரியான நோயறிதல் இல்லாமல் மருந்து பருகியதால் குழந்தைகள் உயிரிழந்தனர்" என, விசாரணை குழு குற்றஞ்சாட்டியது. மேலும், அவர் மீது கொலை மற்றும் மருந்து கலப்பட சட்டங்களின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதனைத்தொடர்ந்து மத்தியப் பிரதேச அரசு, கடந்த அக்டோபர் 4 அன்று 'கோல்ட்ரிஃப்' மருந்தின் விற்பனை மற்றும் விநியோகத்தை மாநிலம் முழுவதும் தடை செய்தது. ஸ்ரேசன் நிறுவனத்தின் மற்ற பொருட்களுக்கும் தடை விதிக்கப்பட்டது. தமிழ்நாட்டில் காஞ்சிபுரம் ஆலையில் சோதனை நடத்தப்பட்டு, கலப்படம் உறுதிப்படுத்தப்பட்டது. இதேபோல் உத்தரபிரதேசம் மற்றும் கேரளாவிலும் இதே மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பாக மாநில சிறப்பு விசாரணைக் குழு (SIT) அமைக்கப்பட்டு, விசாரணை தொடங்கியுள்ளது. மத்திய சுகாதார அமைச்சகம், அனைத்து மாநிலங்களுக்கும் மருந்து பாதுகாப்பு குறித்த அறிவுறுத்தல் அனுப்பியுள்ளது. குழந்தைகளுக்கு வயதுக்கு ஏற்ற மருந்துகளை மட்டும் பயன்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இந்தப் உயிரிழப்புகள், இந்தியாவின் மருந்து கட்டுப்பாட்டு அமைப்பின் பலவீனங்களை வெளிப்படுத்துகின்றன.

சர்ச்சைக்குரிய இருமல் மருந்தில் டையெத்திலீன் கிளைக்கால் (48.6% w/v) என்ற நச்சுப்பொருள் கலக்கப்பட்டிருப்பதாக சொல்லப்பட்டிருக்கிறது. எனவே அடுத்த அறிவிப்பு வரும் வரை 'கோல்ட்ரிஃப் சிரப்' எனும் இருமல் மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்றும் அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: குழந்தைகளுக்கு Cough syrup கொடுக்கக்கூடாதா..?? மத்திய அரசின் அட்வைஸ் என்ன..??

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share