×
 

தூக்குல போடுங்க... 33 குழந்தைகளை மிருகத்தனமாக சீரழித்த தம்பதிக்கு மரண தண்டனை...!!

33 குழந்தைகளை மிருகத்தனமாக சீரழித்த தம்பதிக்கு தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.

உத்தரப் பிரதேச மாநிலத்தில், குழந்தைகள் மீதான பாலியல் கொடுமைகளில் இதுவரை கண்டிராத அளவுக்கு கொடூரமான ஒரு வழக்கு சமீபத்தில் முடிவுக்கு வந்துள்ளது. பண்டா மாவட்டத்தில் உள்ள சிறப்பு போக்சோ நீதிமன்றம், ஒரு தம்பதிக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்துள்ளது. இந்த தம்பதி, கிட்டத்தட்ட பத்தாண்டுகாலம் 33 சிறுவர்களை மிருகத்தனமாக சீரழித்து, அவர்களை வைத்து ஆபாச வீடியோக்களை எடுத்து, அவற்றை டார்க் வெப் மூலம் உலகம் முழுவதும் விற்று வந்துள்ளனர்.

இந்த கொடூரத்தின் மையத்தில் இருப்பவர் ராம்பவன் , வயது 50. அவர் உத்தரப் பிரதேச அரசின் நீர்ப்பாசனத் துறையில் இளநிலை பொறியாளராக பணியாற்றியவர். அவருடன் சேர்ந்து அவரது மனைவி துர்காவதி இந்த குற்றத்தில் முழு உடந்தையாக இருந்துள்ளார். 2010 முதல் 2020 வரையிலான காலகட்டத்தில், பண்டா மற்றும் சித்ரகூட் பகுதிகளைச் சேர்ந்த ஏழை எளிய குடும்பங்களைச் சேர்ந்த சிறுவர்களை இவர்கள் இலக்காகக் கொண்டுள்ளனர். சில குழந்தைகள் வெறும் மூன்று வயதே ஆகியிருந்தன.

பெரும்பாலானவர்கள் 16 வயதுக்குட்பட்டவர்கள். ஆன்லைன் வீடியோ கேம்கள், பணம், பரிசுப் பொருட்கள் என்று ஆசை காட்டி அவர்களை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு அவர்களை பாலியல் ரீதியாக துன்புறுத்தியது மட்டுமல்லாமல், அந்த கொடுமைகளை வீடியோவாகப் பதிவு செய்துள்ளார். மனைவி துர்காவதியும் இதில் துணை நின்று, சில சமயங்களில் நேரடியாக பங்கேற்றுள்ளார். இந்த வீடியோக்களை டார்க் வெப் தளங்களில் வெளிநாடுகளில் உள்ள வாடிக்கையாளர்களுக்கு விற்று பணம் சம்பாதித்துள்ளனர்.

இதையும் படிங்க: நெருங்கும் தேர்தல்... திமுக - இந்திய முஸ்லிம் லீக் தொகுதி பங்கீடு பேச்சுவார்த்தை...!!

47 நாடுகளில் இந்த ஆபாசப் பொருட்கள் பரவியிருந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது. இந்தக் குற்றம் வெளியே தெரிய வந்தது 2020ஆம் ஆண்டுதான். சில பாதிக்கப்பட்ட குழந்தைகளின் பெற்றோரும், சமூக ஆர்வலர்களும் புகார் அளித்ததைத் தொடர்ந்து, வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டது. 2021இல் சிபிஐ குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. நீதிமன்ற விசாரணையில், 33 சிறுவர்களின் வாக்குமூலங்கள், டிஜிட்டல் ஆதாரங்கள், பறிமுதல் செய்யப்பட்ட சாதனங்கள் ஆகியவை மிகத் தெளிவாக குற்றத்தை நிரூபித்தன.

சில குழந்தைகளுக்கு உடல் ரீதியாக காயங்கள் ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தனர். நீதிபதி பிரதீப் குமார் மிஸ்ரா தலைமையிலான சிறப்பு போக்சோ நீதிமன்றம், இந்தக் குற்றம் அரிதிலும் அரிதானது என்று வகைப்படுத்தி, இருவருக்கும் தூக்கு தண்டனை விதித்தது. மேலும், ஒவ்வொரு பாதிக்கப்பட்ட குழந்தைக்கும் 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க உத்தரவிட்டது. குற்றவாளிகளின் சொத்துகளில் இருந்து பணம் பறிமுதல் செய்து அதை பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்கவும் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: வீட்டு சுவற்றில் மறைக்கப்பட்ட தங்க கட்டிகள்! ஹோட்டல் உரிமையாளர் வீட்டில் பண கட்டுகள்! அதிகாரிகள் அதிர்ச்சி!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share