வாக்காளர் பட்டியல் பணிச்சுமை: உத்தரப் பிரதேச ஆசிரியர் கடிதம் எழுதி வைத்து தற்கொலை!
உத்தரபிரதேச மாநிலம் முராதாபாத்தில் எஸ்.ஐ.ஆர் தொடர்பான பணி அழுத்தம் காரணமாக வாக்குச்சாவடி நிலை அலுவலர் சர்வேஷ் சிங் (46) தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவில் விரைவில் நடைபெறவுள்ள சட்டமன்றத் தேர்தல்களையொட்டி, நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணிகள் நடைபெற்று வரும் நிலையில், அதன் பணிச்சுமை காரணமாக உத்தரப் பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த பள்ளி ஆசிரியர் ஒருவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
உத்தரப் பிரதேச மாநிலம், முராதாபாத் மாவட்டத்தைச் சேர்ந்த ஆசிரியர் சர்வேஷ் சிங். இவர் வாக்காளர் தீவிர திருத்தப் பணியில் நிலை அலுவலராகப் பணியாற்றி வந்தார். அக்டோபர் 07, 2025 முதல் இந்தப் பணியில் ஈடுபட்டிருந்த சர்வேஷ் சிங், பணிச்சுமையாலும் மன அழுத்தத்தாலும் பாதிக்கப்பட்ட நிலையில், தனது வீட்டில் உள்ள அறையில் தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.
சர்வேஷ் சிங் எழுதி வைத்திருந்த தற்கொலைக் கடிதத்தைப் போலீசார் கைப்பற்றியுள்ளனர். அதில், பகல் இரவாகப் பணியாற்றியபோதும், வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தப் பணியை உரிய காலக்கெடுவுக்குள் முடிக்க முடியவில்லை என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: சென்னை வாக்காளர் நீக்கம்: SIR திருத்தப் பணியால் 10 லட்சம் பேர் நீக்கப்பட வாய்ப்பு.. மாவட்ட நிர்வாகம் தகவல்!
இந்தியத் தேர்தல் ஆணையம் (ECI) தொடங்கியுள்ள இந்த SIR திருத்தப் பணிகளில் ஆசிரியர்கள், அங்கன்வாடி ஊழியர்கள் உட்படப் பல அரசு ஊழியர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ள நிலையில், பணிச்சுமை காரணமாக ஊழியர்கள் மன அழுத்தத்திற்கு உள்ளாவது குறித்து ஏற்கனவே புகார்கள் எழுந்துள்ள நிலையில், இந்தச் சம்பவம் அரசு ஊழியர்கள் மத்தியில் பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.
தற்கொலை செய்துக்கொள்வதற்கு முன்னதாக சர்வேஷ் சிங் எழுதி வைத்த கடிதத்தை போலீசார் கைப்பற்றியுள்ளனர். அந்த கடிதத்தில், பகல் இரவாக பணியாற்றியபோது வாக்காளர் பட்டியல் தீவிர திருத்த பணியை உரிய காலக்கெடுக்குள் முடிக்க முடியவில்லை என்று கூறியுள்ளார். போலீசார் அந்த கடிதத்தின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: நவம்பர் மாத ஜிஎஸ்டி வசூல் ₹1.70 லட்சம் கோடி: உள்நாட்டு வருவாய் சரிவுக்கு காரணம் என்ன?