×
 

மீண்டும் வெடித்த வடகலை, தென்கலைப் பிரிவினை... காஞ்சிபுரம் வரதராஜர் கோயிலில் பரபரப்பு...!

வடகலைப் பிரிவின் தலைவரான வேதாந்த தேசிகரை தென்கலைப் பிரிவினர் பாடக்கூடாது என்று கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயிலில் வடகலை – தென்கலை பிரிவினரிடையே மீண்டும் வாக்குவாதம். ஸ்ரீ வேதாந்த தேசிகன், சன்னதியில் நடந்த உற்சவத்தில் மீண்டும் பிரச்சனை.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் உள்ள தேசிகன் சன்னதியில், புரட்டாசி மாத திருவோண நட்சத்திரத்தை முன்னிட்டு வேதாந்த தேசிகர் என்று அழைக்கப்படும் ஆச்சாரியருக்கு சிறப்பு உற்சவம் நடைபெறுவது வழக்கம். ஆண்டுதோறும் இந்த உற்சவம் நடைபெற்று வருகிறது.

தற்போது இந்த உற்சவம் இரண்டு, மூன்று நாட்களாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது. 10 நாட்கள் நடைபெறக்கூடிய இந்த உற்சவத்தில், சுவாமி முன்பு வடகலைப் பிரிவினரும், தென்கலைப் பிரிவினரும் தங்களது மந்திரங்களை, வேத மந்திரங்களைச் சொல்லிப் பாடுவது வழக்கம்.

இதையும் படிங்க: கேவலம் ரூ.20,000-க்காக சிசுவுடன் துடிதுடித்து பலியான கர்ப்பிணி... மரக்கடை கொடூரன் மீது பாய்ந்தது அதிரடி ஆக்‌ஷன்...!

இந்த உற்சவத்தின்போது, திவ்ய பிரபந்தம் மற்றும் மந்திர புஷ்பம் பாடுவது தொடர்பாக நேற்று  இரவு வடகலை – தென்கலை பிரிவினரிடையே மீண்டும் வாக்குவாதம் ஏற்பட்டது. அந்த வகையில், தென்கலைப் பிரிவினர் வேதாந்த தேசிகரைப் பாடுவதற்கு அனுமதிக்கக் கூடாது என்று கூறி, வேதாந்த தேசிகருடைய வாகனத்தில் வந்த வடகலைப் பிரிவினர் தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

நேற்று இரவு நடைபெற்ற உற்சவத்தின்போது இரு தரப்பினருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் நடைபெற்றது. குறிப்பாக, வேதாந்த தேசிகர் வடகலைப் பிரிவின் தலைவராகவும், மணவாள மாமுனிகள் தென்கலைப் பிரிவின் தலைவராகவும் இருந்ததாகக் கூறப்படுகிறது.

இதனால், வடகலைப் பிரிவின் தலைவரான வேதாந்த தேசிகரை தென்கலைப் பிரிவினர் பாடக்கூடாது என்று கூறி தொடர்ந்து வாக்குவாதத்தில் ஈடுபட்டதால், அந்தப் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அங்கு வந்த பக்தர்கள் மத்தியில் இது பெரும் மன உளைச்சலை ஏற்படுத்தியதாகக் கூறப்படுகிறது.

இதன் காரணமாக தீர்த்தம் வழங்குவதுகூட நிறுத்தப்பட்டது. இதையடுத்து, கோவில் நிர்வாகம் உடனடியாகத் தலையிட்டு, பல்வேறு நீதிமன்ற உத்தரவுகள் உள்ள நிலையில், அவற்றை அடிப்படையாகக் கொண்டு இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

 

 

இதையும் படிங்க: அடுத்தடுத்து பறந்த சஸ்பெண்ட் ஆர்டர்... டாஸ்மாக் ஊழியர்கள் தலையில் இடியை இறக்கிய தவெக அரசு...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share