×
 

இதெல்லாம் தமிழ்நாட்டுக்கு பேராபத்து... ஆதங்கத்தை வெளிப்படுத்திய வைகோ...!

மாணவர்களிடையே சாதிய மோதல் ஏற்படுவது வேதனையின் உச்சம் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார்.

தமிழ்நாடு, தனது பண்பாட்டு பன்முகத்தன்மை, தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும் சமூக நலன் திட்டங்களுக்காக அறியப்படும் மாநிலமாக இருந்தாலும், சமீப காலங்களில் குற்றச்சம்பவங்களின் அதிகரிப்பு குறித்த குற்றச்சாட்டுகள் அரசியல் மற்றும் சமூக விவாதங்களில் முக்கிய இடம்பெற்றுள்ளன.

தமிழ்நாட்டில் குற்றச்சம்பவங்கள் அதிகரித்து வருவதாக முதலில் கடுமையாகக் குற்றம் சாட்டியது பாஜக போன்ற எதிர்க்கட்சிகள்தான். தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன், கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு அனைத்து வகை குற்றங்களும் 52% அதிகரித்துள்ளன என்று கூறி, திமுக அரசை கடுமையாக விமர்சித்தார். அதிமுக உள்ளிட்ட கட்சிகளும் கடுமையாக விமர்சித்து வருகின்றன.

சென்னை, தமிழ்நாட்டின் பொருளாதார மையமாகவும், கலாச்சார தலைநகரமாகவும் விளங்கும் இந்த நகரம், இன்று போதைப் பொருள்களின் இருண்ட உலகத்தால் சூழப்பட்டிருக்கிறது. கடல் வழி வர்த்தகம், சாலை மற்றும் ரயில் பாதைகள், சர்வதேச விமான நிலையம் என இவை அனைத்தும் போதைக்கு ஏற்ற இலக்குகளாக மாறியுள்ளன. தமிழகத்தில் நடைபெறும் குற்ற சம்பவங்கள் திமுக அரசை பெரும் விமர்சனத்துக்கு ஆளாக்கி உள்ளது. 

இதையும் படிங்க: வைகோவுக்கு இப்படியொரு நிலை வரணுமா? - 14 ஆண்டு கால ரகசியத்தை உடைத்த ஓபிஎஸ்...!

இந்த நிலையில், தமிழ்நாட்டில் கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்பாடு அதிகரித்துள்ளதால் பேராபத்து ஏற்பட்டுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழக அரசு போதையின் உச்சமான டாஸ்மாக்கை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், மாணவர்களிடையே சாதி மோதல் நடைபெறுவது வேதனையின் உச்சம் என்றும் வைகோ வருத்தம் தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: செஞ்ச தப்புக்குதான் ஓபிஎஸ் இப்ப அனுபவிக்கிறாரு... பூந்து விளாசிய வைகோ...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share