மோடி, அமித்ஷா எத்தனை முறை தமிழ்நாட்டுக்கு வந்தாலும் வெற்றி பெற முடியாது... வைகோ திட்டவட்டம்..!!
மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார்.
பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா வாகனங்களில் தேர்தல் பறக்கும் படை சோதனை நடத்தினால் தான் நேர்மையாக செயல்படுகிறது என்று அர்த்தம் என்று வைகோ தெரிவித்துள்ளார். முதலமைச்சர் ஸ்டாலினின் வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் சோதனை நடத்துவதை சுட்டிக்காட்டி பேசினார்.
மதுரையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, மோடியும், அமித்ஷாவும் தமிழகத்தை எத்தனை முறை தங்களுடைய படைகளோடு சுற்றி வந்தாலும் அவர்களால் ஒரு காலமும் இங்கு வெற்றி பெற முடியாது என்று திட்டவட்டமாக கூறினார். பிரதமர் வாகனத்தையில் தேர்தல் பறக்கும்படை சோதனை செய்ய வேண்டும் என்று வலியுறுத்தினார்.
தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை செல்லும் பொழுது பல்வேறு இடங்களில் அவரது வாகனத்தில் தேர்தல் பறக்கும் படையினர் தீவிர சோதனை நடத்தினர். இரண்டு முறைக்கு மேலாக இதுவரை முதலமைச்சர் ஸ்டாலின் பரப்புரை வாகனத்தில் சோதனை நடத்தப்பட்டு இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், முதல்வர் ஸ்டாலின் வாகனத்தை தேர்தல் பறக்கும் படையில் குடைந்து குடைந்து சோதனை போட்டார்கள் என்றும் பிஜேபி ஆளும் மாநிலங்களிலும் அங்கு உள்ள முதல்வர் வாகனத்தை இதுபோன்ற சோதனையை செய்தார்களா எனவும் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதையும் படிங்க: தேவையின்றி ஸ்டாலின் மீது அபாண்டப் பழியைச் சுமத்தினார் இபிஎஸ்..!! கொந்தளித்த வைகோ..!!
பிரதமர் விமானம் மூலமாக வருகையில் எத்தனை ஆயிரம் கோடி கொண்டு வருவார் என தெரியாது என்றும் அவர் ரோடு ஷோ போகும் வாகனங்களை சோதனை போடுகிறார்களா எனவும் கேட்டுள்ளார். பிரதமர், அமித்ஷா வாகனத்தையும் சோதனை செய்தால் தான் தேர்தல் ஆணையம் வெளிப்படை தன்மையுடன் செயல்படுகிறது என அர்த்தம் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: உதயசூரியனுக்கு ஓகே சொன்னது ஏன்?! வைகோ மனம் மாறியது எப்படி? துர்கா ஸ்டாலின் மேஜிக்!!