×
 

மகனுக்கு மந்திரி பதவி.. பாஜகவுடன் டீல்.. அப்செட்டில் வைகோ..!

பாஜகவுடன் கூட்டணி அமைக்க மகனுக்கு மந்திரி பதவி கேட்பதாக வதந்தி பரப்பப்படுவதாக மதிமுக பொதுச் செயலாளர் வைகோ குற்றச்சாட்டு

பாஜகவுடன் பேச்சு, மகனுக்கு மந்திரி பதவி கேட்கிறேன் என பொய் செய்தியை பரப்புரகிறார்கள். பாஜக நுழையக்கூடாது என்பதற்காகவே திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம் என விழுப்புரத்தில் வைகோ பேச்சு.

மதிமுகவின் விழுப்புரம் மண்டல செயல்வீரர்கள் கூட்டம் விழுப்புரத்தில் தனியார் திருமண மண்டபத்தில் நேற்று மாலை மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் வைகோ பேசியதாவது, கூட்டத்தில் சிலர் வெளி நின்றிருக்கிறார்கள். இதுதானா கட்சிக்கு செய்யும் சேவை. எனக்கு உடல்நிலை சரியில்லை என்றாலும் தொடர்ந்து பயணம் செய்து நிகழ்ச்சியில் உரையாற்றி வருகிறேன்.

மதிமுக கட்சி அழிந்துவிட்டது என சில ஊடகவியலாளர்கள் தொலைக்காட்சியில் மதிமுக அழிந்துவிட்டது என பேசுகிறார்கள். மதிமுக பல தூரோகங்களை பார்த்து விட்டேன்.

இதையும் படிங்க: துரை வைகோ அரசியலில் LKG பாப்பா..! மல்லை சத்யா கடும் தாக்கு..!

வேலூர் சிறையில் நான் வசதியாக இருந்தேன் என தொலைக்காட்சியில் சொன்னவருடன் உறவில் இருப்பதற்கு என்ன பெயர் தூரோகம். 

என் கட்சி குறித்து அவதூராக பேசியவர்களுடன் உறவில் இருப்பவர்கள் என்ன சொல்வது.  மதிமுகவை அழிக்க சதி திட்டம் தீட்டப்பட்டது. கட்சியை பாதுகாக்க வேண்டும் என நிர்வாக குழுவில் பேசினேன். மதிமுக நாங்கள் தான் என திட்டத்தை அறிந்தேன். இதற்கு எதிராக நிர்வாக குழுவில் தீர்மாணம் கொண்டு வர வேண்டும் என கூறியபோது நான் வேண்டாம் என கூறிவிட்டேன். துரை வைகோ கட்சிக்கு வர வேண்டாம் என கூறியபோது, நிர்வாக. குழுவினர், மாவட்ட செயலாளர்கள் வற்புறுத்தனிலின் பேரில் தேர்தல் நடத்தினோம். துரை வைகோ கட்சிக்கு வரலாமா, வேண்டாமா என்ற தேர்தலில் 16 பேர் வர வேண்டும் என தீர்ப்பு வழங்கினார் இருவர் மட்டுமே எதிர்த்து வாக்களித்தனர். நான் விரும்பவில்லை, அன் கூடாது என கூறினேன். இதனால் வாரிசு அரசியல் செய்கிறேன் என பழிக்கு ஆலாகியுள்ளேன்.

தனிக்கட்சி தொடங்கும் என்னமிலை. திமுகவை உயிருக்கும் மேலாக நேசித்தேன். உயிரைப்பற்றி நான் எப்போதும் கவலைப்பட்டத்தில்லை.

இலங்கையில் இந்திய படைக்கும், விடுதலை புலிகளுக்கும் இடையே ஏற்பட்ட சண்டையில் நான் இறந்திருந்தால் பழிக்கு ஆலாகாமல் அஞ்சலி செலுத்தியிருப்பார்கள். ஆனால் பழிசுமக்க வேண்டும் என இயற்கை சதி செய்தது.

இந்துத்துவ, ஆர்.ஆர்.எஸ், பஜக சக்திகள். தமிழ்நாட்டில் நுழைந்தால் இந்தி தான் இருக்கும்..கிருஸ்தவர்களுக்கும், இஸ்லாமியர்களுக்கு வாக்கு கிடையாது என்பதை சொன்னவன் நான்.இந்துத்துவ சக்திகள் இங்கு கால் வைக்கக்கூடாது. பதவி ஏற்பு விழாவுக்கு ராஜபக்‌ஷே கலந்துக்கொண்டதை கண்டித்து. மோடி பதவி ஏற்றபோது கருப்பு கொடி கட்டினோம் அதனால் கைது செய்யப்பட்டோம்.

பாஜகவுடன் பேச்சு, மகனுக்கு மந்திரி பதிவு கேட்கிறேன் என பொய் செய்தியை பரப்புரகிறார்கள். பஜக நுழையக்கூடாது என்பதற்காகவே திமுகவுடன் கூட்டணி வைத்துள்ளோம்.

திமுக வெற்றி பெற வேண்டும். பாஜக கூடாரத்தை தோற்கடிக்க வேண்டும். தமிழ்நாட்டு நன்மைக்காக வாழும் உரிமைக்காக, தென்னகத்தை பாதுக்காக பிறந்தேன். மீண்டும் பிறப்போன் என நம்பிக்கை இல்லை இவ்வாறு பேச்சை நிறைவு செய்தார் வைகோ.

இதையும் படிங்க: கிரீன் சிக்னல் காட்டிய பாஜக... திமுக நிகழ்ச்சியில் மிஸ்ஸான ஆன மதிமுக...!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share