×
 

உயிரைக் கொடுத்து பிரச்சாரம் செய்தேன்..! ஆனால்... வைகோ பரபரப்பு பேட்டி..!!

சட்டமன்றத் தேர்தலில் உயிரைக் கொடுத்து பிரச்சாரம் செய்ததாக வைகோ தெரிவித்தார்.

தமிழ்நாடு அரசியலில் தற்போது பல மாற்றங்கள் நிகழ்ந்து வரும் நிலையில், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகம் தனது பொதுக்குழு கூட்டத்தை ஜூன் 27-ம் தேதி சென்னையில் நடத்த உள்ளது. இந்தக் கூட்டம் கட்சியின் எதிர்கால திசை, திமுகவுடனான உறவு மற்றும் அடுத்தகட்ட அரசியல் உத்திகள் ஆகியவற்றை விவாதிக்கும் முக்கிய மேடையாகப் பார்க்கப்படுகிறது. பல ஊகங்களுக்கு மத்தியில், திமுக கூட்டணியில் இருந்து மதிமுக விலகுமா என்ற கேள்விகள் எழுந்துள்ளது. 

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தலைமையில் நடைபெறும் இந்த 32-வது பொதுக்குழு கூட்டம், கட்சியின் நிர்வாகக் குழு முடிவின் அடிப்படையில் அறிவிக்கப்பட்டது. மதுரை உள்ளிட்ட இடங்களில் நடைபெற்ற மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனை கூட்டங்களுக்குப் பிறகு இந்த அறிவிப்பு வெளியானது. கூட்டத்தில் கட்சியின் உள் விவகாரங்கள், தலைமைப் பொறுப்புகள், எதிர்காலத் தேர்தல் உத்திகள் மற்றும் தற்போதைய அரசியல் சூழல் ஆகியவை முக்கிய அம்சங்களாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

கூட்டணி நிலை மற்றும் பின்னணிமதிமுக நீண்டகாலமாக திமுக தலைமையிலான கூட்டணியில் இணைந்து செயல்பட்டு வருகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலில் மதிமுகவுக்கு சில தொகுதிகள் ஒதுக்கப்பட்டு, உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டது.

இதையும் படிங்க: திமுகவுடன் கூட்டணி முறிவா.? 27 ஆம் தேதி கூடுகிறது மதிமுக பொதுக்குழு..! பரபரக்கும் அரசியல்..!

இந்த நிலையில், சட்டமன்ற தேர்தலில் உயிரை கொடுத்து பிரச்சாரம் செய்தேன் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார். ஒரு தொகுதியில் நாங்கள் விரும்பும் சின்னத்தில் போட்டியிட விரும்பினோம், அதிலும் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட கூறினர் என்றார். திமுக தலைமையிலான கூட்டணிக்கு 34 தொகுதிகளில் ஆதரவாக நான் பிரச்சாரம் செய்த நிலையில் 24 தொகுதியில் வெற்றி பெற்று இருப்பதாக கூறியுள்ளார்.

இதையும் படிங்க: இனி திமுக வேலைக்கே ஆகாது! தவெக பக்கம் தாவும் வைகோ! மகன் துரைக்காக இப்போவே போட்டாச்சு துண்டு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share