×
 

இடைத்தேர்தலில் மதிமுக போட்டியில்லை! தவெக கூட்டணி வெற்றிக்கு முழு மூச்சாக உழைப்போம்!! வைகோ விளக்கம்!

நெல்லையில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, இடைத்தேர்தலில் மதிமுக போட்டியிடாது என்று தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்றத்தில் திருச்சி கிழக்கு, மதுராந்தகம், தாராபுரம், அம்பாசமுத்திரம், பெருந்துறை, விராலிமலை மற்றும் கரூர் ஆகிய ஏழு தொகுதிகள் தற்போது காலியாக உள்ளன. இந்த தொகுதிகளுக்கு எப்போது இடைத்தேர்தல் நடைபெறும் என அரசியல் கட்சிகள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

இந்நிலையில் நெல்லையில் செய்தியாளர்களை சந்தித்த மதிமுக பொதுச்செயலாளர் வைகோ முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டார். “வரும் 7 தொகுதி இடைத்தேர்தலில் மதிமுக சார்பில் போட்டியிடாது” என்று தெளிவாக தெரிவித்தார். மேலும் அவர், “அடுத்து வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் மீண்டும் முதலமைச்சர் பதவியை வெற்றிகரமாகத் தக்க வைத்துக் கொள்வார்” என்று நம்பிக்கை தெரிவித்தார்.

வைகோ புகழாரம் பாடிய வகையில், “முதல்வர் விஜய், திமுக ஆட்சியில் கொடிகட்டிப் பறந்த ஊழலை ஒழித்து, தமிழ்நாட்டில் நல்லாட்சியை நிலைநாட்டி வருகிறார்” என்று பாராட்டினார். தவெக கூட்டணிக்கு மதிமுக முழு ஆதரவுடன் உழைக்கும் என்றும் உறுதியளித்தார்.

இதையும் படிங்க: திமுக ஆட்சியில் கமிஷன், கட்டிங், கரப்ஷன்..!! செய்தியாளர்களிடம் சீறிய வைகோ..!!

இதேவேளையில், அரசியல் களத்தில் பரபரப்பை ஏற்படுத்திய ரூ.35 கோடி பேரம் பேசப்பட்ட விவகாரத்தை “தமிழ்நாட்டில் இதுவரை நடக்காத பெரிய அரசியல் மோசடி” என்று வைகோ விமர்சித்தார். இந்த விவகாரம் தொடர்பாக மக்களிடையே பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.

தமிழக அரசியலில் தற்போது பல மாற்றங்கள் நடைபெற்று வரும் நிலையில், வைகோவின் இந்த அறிவிப்பு அரசியல் கட்சிகளிடையே புதிய விவாதங்களை ஏற்படுத்தியுள்ளது. ஏழு தொகுதி இடைத்தேர்தல் எப்போது அறிவிக்கப்படும் என்பதை எதிர்பார்த்து அரசியல் தரப்புகள் காத்திருக்கின்றன. 

மதிமுகவின் இந்த முடிவு தவெக கூட்டணியை வலுப்படுத்தும் என அரசியல் பார்வையாளர்கள் கருதுகின்றனர். வைகோவின் பேட்டி தமிழக அரசியல் சூழலை மேலும் சூடுபிடிக்கச் செய்துள்ளது.

இதையும் படிங்க: மதிமுகவிலும் தந்தை - மகன் முட்டல் மோதல்?! பொதுக்குழுவை புறக்கணித்த துரை வைகோ!! பின்னணி அலசல்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share