அமோனியா வாயு கசிவு.. விசாரணைக் குழு பரிந்துரைகளை கவனிக்கணும்..! வைகோ வலியுறுத்தல்..!!
அமோனிய வாயு கசிவு விவகாரத்தில் விசாரணை குழு பரிந்துரைகளை செயல்படுத்த வேண்டும் என வைகோ தெரிவித்துள்ளார்.
இறால் ஆலையில் அமோனியா கசிவால் தொழிலாளர்கள் உயிரிழப்பு விவகாரத்தில் விசாரணைக் குழு பரிந்துரையை செயல்படுத்த வேண்டுமென மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தினார். திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பெரியபாளையத்தில் இயங்கி வரும் இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையில் நேற்று அமோனியா வாயுக் கசிவு ஏற்பட்டதால் அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வந்த தொழிலாளர்களுக்கு மூச்சுத்திணறல் ஏற்பட்டுள்ளது என்று கூறினார்.
சிலருக்கு வாய், மூக்கிலிருந்து ரத்தக் கசிவும் ஏற்பட்டுள்ளது. இதில் பாதிக்கப்பட்ட 70-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர் என்பதையும் குறிப்பிட்டுள்ள வைகோ, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டவர்களில் 2 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும் கூறியுள்ளார். அருகிலுள்ள சில மருத்துவமனைகளில் 60-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இவர்களில் சிலர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார்கள் என்ற செய்தி அதிர்ச்சி தருகிறது என்றும் வேதனையை வெளிப்படுத்தினார்.
இந்த இறால் பதப்படுத்தும் தொழிற்சாலையினால் ஏற்படும் சுற்றுச்சூழல் பாதிப்புகள் மற்றும் அங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் பாதிக்கப்படும் அபாயம் இவற்றையெல்லாம் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள பொது நல அமைப்பினர் பலமுறை அரசுக்கு வேண்டுகோள் விடுதி இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். ஆனால் அதிகாரிகளின் மெத்தனப் போக்கும், ஆலை நிர்வாகத்தின் அலட்சியமும் தொழிலாளர்கள் உயிர் பலியாகும் நிலை ஏற்பட்டிருக்கிறது என்றும் தமிழ்நாடு முதல்வர் விஜய் இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்றும்
இதையும் படிங்க: வைகோவுக்கு தவெக அரசில் முக்கிய பதவி! முதல்வர் விஜயுடன் 40 நிமிட ஆலோசனை! ஃபைனலானது டீல்!!
விசாரணைக் குழுவின் பரிந்துரைகளை பரிசீலித்து தகுந்த நடவடிக்கையை அரசு மேற்கொள்ள வேண்டும் எனவும் வலியுறுத்தினார். உயிரிழந்த வட மாநில தொழிலாளர்கள் குடும்பத்தினருக்கு சட்ட பூர்வ நட்ட ஈடு தொகையை வழங்க ஏற்பாடு செய்ய வேண்டும் என்று தெரிவித்த வைகோ, சிகிச்சை பெற்று வரும் தொழிலாளர்களுக்கு குறிப்பாக பெண்களுக்கு தீவிர சிகிச்சை அளித்து, அவர்களது உயிரைக் காக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநர் உரையில் விஜய் அரசின் தொலைநோக்கு பார்வை..!! புகழ்ந்து தள்ளிய வைகோ..!!