உலகளாவிய போராட்டம் தொடரட்டும்! வைக்கம் விருது வென்றுள்ள தேன்மொழிக்கு MP கனிமொழி வாழ்த்து...!
வைக்கம் விருது வென்றுள்ள தேன்மொழிக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
வைக்கம் விருதின் பின்னணி, 1924-1925ஆம் ஆண்டுகளில் நடைபெற்ற வரலாற்று சிறப்பு பெற்ற வைக்கம் சத்யாகிரகத்துடன் பின்னிப்பிணைந்துள்ளது. கேரளாவின் வைக்கம் கோயில் வளாகச் சுற்றியுள்ள சாலைகளில் தாழ்த்தப்பட்ட சமூக மக்களுக்கு நுழைவு மறுக்கப்பட்டிருந்த அந்தக் காலகட்டத்தில், சமூக சீர்திருத்தவாதி ஈ.வி.ராமசாமி (பெரியார்) தலைமையில் தொடங்கப்பட்ட இந்த இயக்கம், சாதி அடக்குமுறைக்கு எதிரான முதல் பெரிய சிவில் அநுசரண இயக்கமாகத் திகழ்ந்தது.
பெரியாரின் தைரியமான தலைமையால் வெற்றி பெற்ற இந்தப் போராட்டம், இந்தியாவின் சமூக நீதி இயக்கங்களுக்கு அடித்தளமிட்டது. இதை நினைவுகூரும் வகையில், தமிழ்நாடு அரசு 2023இல் இந்த விருதை நிறுவியது. ஒடுக்கப்பட்ட மக்களின் நலனுக்காகவும், சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும் உழைப்பவர்களை ஊக்குவிப்பதே இதன் முதன்மை நோக்கம். முந்தைய ஆண்டுகளில், 2024இல் கர்நாடகாவின் தலித் எழுத்தாளர் தேவநூர் மகாதேவா இந்த விருதைப் பெற்றார்.
அது சமூக நீதியின் பரந்த அளவை வெளிப்படுத்தியது. இந்நிலையில், 2025இல் ஈக்வாலிட்டி லேப்ஸ் நிறுவனர் தேன்மொழி சௌந்தரராஜனுக்கு வழங்கப்படும் இந்த விருது, தலித் உரிமைகளுக்கான உலகளாவிய போராட்டத்தை வலியுறுத்துகிறது.
இதையும் படிங்க: அமெரிக்காவுக்கு பறக்கும் ‘வைக்கம் விருது’... இந்தாண்டு யாருக்கு தெரியுமா?
தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டிற்கான வைக்கம் விருதுக்கு தேர்வாகியிருக்கும், அமெரிக்காவைச் சேர்ந்த தேன்மொழி சௌந்தரராஜனுக்கு நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
இந்திய சமூகம் புலம்பெயர்ந்த இடங்களில் எல்லாம் சாதிய கட்டமைப்பை கொண்டு செல்லும் அவலத்திற்கு எதிராக குரலெழுப்பி வருவதோடு, தனது ஈக்வாலிட்டி லேப்ஸ் அமைப்பின் மூலம் அமெரிக்காவின் கல்வி நிலையங்களிலும், பெருநிறுவனங்களிலும் நிகழும் சாதிய ஒடுக்குமுறைகளுக்கு எதிராகவும் போராடிவரும் அவரது சமூகப் பணி தொடர வாழ்த்துவதாக தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: TNPSC குரூப் 4 தேர்வு முடிவுகள் வெளியாகின... அதிகாரப்பூர்வ அறிவிப்பு...!