×
 

#BREAKING: ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் திமுகவில் ஐக்கியம்... முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் இணைந்தார்..!

தீவிர ஓபிஎஸ் ஆதரவாளரான வைத்திலிங்கம் திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார்.

தமிழ்நாட்டின் அரசியல் களத்தில் தற்போது நடக்கும் மிக முக்கியமான மாற்றங்களில் ஒன்றாக, ஓ.பன்னீர்செல்வம் அணியின் முக்கிய ஆதரவாளரும், ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஆர். வைத்திலிங்கம் திமுகவில் இணைந்திருப்பது அரசியலில் சலசலப்பை ஏற்படுத்தி உள்ளது. இன்று காலை அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்துவிட்டு, சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து அதிகாரப்பூர்வமாக திமுகவில் இணைந்துள்ளார்.

சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்திருந்தார். தற்போது அவர் திமுகவில் இணைந்துள்ளார். ஆர். வைத்திலிங்கத்தின் அரசியல் பயணம் தமிழ்நாட்டின் அரசியல் வரலாற்றில் மிக முக்கியமான ஒரு பாதையாக இருந்து வருகிறது. தஞ்சாவூர் மாவட்டத்தின் ஒரத்தநாடு தொகுதியை தன் தொகுதியாகக் கொண்ட இவர், அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவராக பல ஆண்டுகள் பணியாற்றியவர்.

அவரது அரசியல் வாழ்க்கை ஜெயலலிதா ஆட்சிக் காலத்திலிருந்து தொடங்கி, கட்சியின் உள்ளக மாற்றங்கள், அதிகாரப் போராட்டங்கள் என பல சவால்களை எதிர்கொண்டு வந்துள்ளது. வைத்திலிங்கம் 2001ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் ஒரத்தநாடு தொகுதியிலிருந்து முதல் முறையாக எம்எல்ஏவாகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அப்போது ஜெயலலிதா தலைமையிலான அதிமுக ஆட்சியில் அவர் தொழில்துறை அமைச்சராகவும், பின்னர் வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சராகவும் பதவி வகித்தார்.

இது அவரது அரசியல் வாழ்க்கையின் முதல் பெரிய உயர்வாக அமைந்தது. அதன்பிறகு 2006 மற்றும் 2011 தேர்தல்களிலும் ஒரத்தநாடு தொகுதியில் வெற்றி பெற்று தொடர்ந்து எம்எல்ஏவாக இருந்தார். தற்போது அவர் திமுகவில் இணைந்திருப்பது அரசியலில் பெரும் திருப்புமுனையாக மாறியுள்ளது. அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் வைத்திலிங்கம் தன்னை திமுகவில் இணைத்துக்கொண்டார். 

இதையும் படிங்க: வழக்கம்போல் LIVE CUT..! திமுக மிரண்டு போய் இருக்கு..! அதிமுக கடும் விமர்சனம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share