வாக்காளர்களை இழிவுபடுத்துவதா.? இதான் திமுக அரசியல் நாகரீகமா.? ஆர்.எஸ். பாரதியை கண்டித்த வானதி சீனிவாசன்..!!
வாக்காளர்களை அவமானப்படுத்தி பேசியதாக ஆர் எஸ் வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்தார்.
வாக்காளர்களுக்கு நல்ல சாவே வராது என்று சென்னை காரம்பாக்கத்தில் நடந்த விழாவில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி சாபம் வெட்டுள்ளார். மா சுப்பிரமணியனை தோற்கடித்த சைதாப்பேட்டை தொகுதி மக்களுக்கு நல்ல சாவே வராது என்றார். இனி மக்களுக்காக எதுவும் செய்ய வேண்டாம் என்றும் கட்சிக்காரர்களுக்காக செய்யுங்கள் எனவும் ஆர் எஸ் பாரதி தெரிவித்தார். ஐந்தாண்டுகள் ஓய்வெடுப்போம் என்று தெரிவித்துள்ளார்.மாசுபிரமணியனை கொண்டு வந்த மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்களின் உறவினர்கள் ஓட்டு போட்டு தமிழக வெற்றி கழகத்திற்கு வெற்றி கிடைத்ததாக தெரிவித்தார். கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டதாக வாக்காளர்களை ஆர்.எஸ் பாரதி அவமானப்படுத்தி உள்ளார். அவரது பேச்சுக்கு வானதி சீனிவாசன் கண்டனம் தெரிவித்தார்.
சென்னையில் நடைபெற்ற திமுக பொதுக்கூட்டத்தில், திமுகவிற்கு வாக்களிக்காத சைதாப்பேட்டை வாக்காளர்களுக்கு “நல்ல சாவே வராது” என்று சாபம் விடும் தொனியில் திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி பேசியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது என பாஜக முன்னாள் MLA வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளார். தங்களுக்கு வாக்களிக்கவில்லை என்பதற்காக மக்களை இழிவுபடுத்துவதுதான் திமுகவின் அரசியல் நாகரீகமா என்று கேட்டுள்ளார்.
எதிர்க்கட்சியினர், திட்டங்களின் பயனாளிகள், பெண்கள் என தொடர்ந்து பல்வேறு தரப்பினரை இழிவுபடுத்திப் பேசிய திமுகவினர், இப்போது தங்களுக்கு வாக்களிக்காத மக்களையே சாபமிடும் நிலைக்குச் செல்வது என்ன மனநிலை என்று தெரியவில்லை என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: கஞ்சா அடித்து விட்டு விசிலுக்கு ஓட்டு போட்டாங்க..! நல்ல சாவே வராது.! சாபம் விட்ட ஆர்.எஸ். பாரதி..!
மேலும், மக்கள் உங்களை வீட்டுக்கு அனுப்பியதற்கான காரணங்களில் இதுபோன்ற அகங்காரப் பேச்சுகளும் ஒன்று என்பதை திமுக-வினர் மறக்கக் கூடாது என்று கூறினார். இனியாவது மேடைகள் உங்கள் வீடுகள் அல்ல என்பதை உணர்ந்து, மக்களின் வாக்குரிமையை மதித்து, அரசியல் நாகரீகத்துடன் பேசக் கற்றுக்கொள்ளுங்கள் என்று அறிவுறுத்தினார்.
இதையும் படிங்க: நெடுஞ்சாலைத் துறை முறைகேடு வழக்கு...எ. வ. வேலுவுக்கு எதிராக கடும் நடவடிக்கை கூடாது... உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு..!!