×
 
☰

கல்விக்கூடங்களில் சாதிவெறி.! டாட் வைக்குமா அரசு.? வானதி சீனிவாசன் ஆதங்கம்.!!

சாதிய வன்கொடுமைகள் தொடர்பாக வானதி சீனிவாசன் கவலை தெரிவித்துள்ளார்.

முன்னாள் எம்.எல்.ஏ. வானதி சீனிவாசன், கோவை பீளமேடு பகுதியில் அரசு உதவி பெறும் தனியார் பள்ளியில் நடந்ததாகக் கூறப்படும் சம்பவம் குறித்து கடும் அதிர்ச்சியும் வேதனையும் தெரிவித்துள்ளார். 11-ம் வகுப்பு மாணவன் அகிலன், சக மாணவர்கள் மற்றும் ஆசிரியரால் சாதிய வன்கொடுமைக்கு ஆளாக்கப்பட்டு உயிரை மாய்த்துக் கொண்டதாக வரும் செய்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது என அவர் குறிப்பிட்டார். சாதிகள் இல்லையடி பாப்பா என்றும், ஒன்றே குலம் ஒருவனே தேவன் என்றும் சமத்துவத்தைப் பயிற்றுவிக்கும் கல்விக் கூடங்களிலேயே சாதிய வன்கொடுமை தலைதூக்கி ஆடுவதை இதுபோன்ற சம்பவங்கள் தெளிவாகப் பிரதிபலிக்கின்றன என வானதி சீனிவாசன் தெரிவித்தார்.

மாணவர் அகிலன் தனக்கு இழைக்கப்பட்ட கொடுமையை பள்ளித் தலைமை ஆசிரியரிடம் தெரிவித்த போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்காதது கண்டிக்கத்தக்கது என்று அவர் சுட்டிக்காட்டினார்.பிறப்பால் ஒருவரை உயர்வு, தாழ்வாகக் கருதுவது தீண்டாமையின் உச்சகட்டம் என அவர் வலியுறுத்தினார். கல்விக் கூடங்களில் தீண்டாமையும் சாதி வன்கொடுமையும் நுழைந்திருப்பது மாணவர்களின் மனதில் எதிர்மறை எண்ணங்களையே விதைக்கும் செயலாகும் என அவர் கவலை தெரிவித்தார்.

சமீப காலங்களாக கல்விக் கூடங்களில் குடிநீர் தொட்டியில் மலம் கலப்பது போன்ற செய்திகளும், மாணவர்கள் ஆசிரியர்களிடம் தரக்குறைவாக நடந்து கொள்ளும் சம்பவங்களும் அரங்கேறி வரும் வேளையில், தற்போது சாதி ரீதியிலான குற்றங்களும் உள்ளே நுழைந்திருப்பது மாணவர் சமுதாயத்திற்கே பெரும் ஆபத்தை விளைவிக்கிறது என அவர் எச்சரித்தார்.கல்வி நிறுவனங்கள் இதுபோன்ற விரும்பத்தகாத செயல்களில் மாணவர்கள் ஈடுபடுவதைத் தடுக்கும் நோக்கில் அவர்களுக்கு உரிய கவுன்சிலிங் வழங்க வேண்டும் என வானதி சீனிவாசன் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க: பெருந்துறை இடைத்தேர்தல்: திமுக, அதிமுகவில் முன்னாள் அமைச்சர்களுக்கு வாய்ப்பு? தவெக விஜய்க்கு அதிர்ச்சி வைத்தியம்!

மேலும் தீண்டாமையை முற்றிலுமாக அகற்றி, கல்வியிலும் தேச நலனிலும் அக்கறை கொள்ளும் பயிற்சிகளிலும் மாணவர்களை இன்னும் அதிகமாக ஈடுபடுத்த வேண்டும் என அவர் அறிவுறுத்தினார்.வாரத்திற்கு இரண்டு பாடவேளைகள் ஒதுக்கி உடற்கல்விக்கு முக்கியத்துவம் கொடுக்கும் தமிழக பள்ளிக் கல்வித் துறை, நன்னெறி கல்விக்கும் தனியாகப் பாடவேளைகளை ஒதுக்கி கற்பிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார். இத்தகைய நடவடிக்கைகள் மூலம் மாணவர்களிடையே சமத்துவ உணர்வையும் மனிதநேயத்தையும் வளர்க்க முடியும் என அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

 

இதையும் படிங்க: "நாகூர் தர்கா விஷயத்தில் அரசியல்"..! அரசாணையைப் பெற்ற அரங்காவலர் குழு..! அமைச்சர் ஷாஜஹான் பேட்டி.!!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share