×
 

வாரிசு சான்றிதழ் வழங்க லஞ்சம் கேட்ட விஏஓ.. சுத்துப்போட்ட போலீஸ்.. குளத்தில் குதித்து தப்ப முயற்சி..!

கோவை அருகில் லஞ்ச பணத்துடன் குளத்தில் குதித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் தொம்பிளிபாளையத்தை சேர்ந்த கிருஷ்ணசாமி வாரிசு சான்றிதழ் பெறுவதற்காக விண்ணப்பித்துள்ளார். அப்போது சான்றிதழ் வழங்குவதற்கு மாதவராயபுரம் விஏஓ வெற்றிவேல் என்பவர் கிருஷ்ணசாமியிடம் ஐந்தாயிரம் ரூபாய் லஞ்சமாக கேட்டுள்ளார்.

அவசர தேவைக்காக சான்றிதழ் வேண்டும் என்று நினைத்த கிருஷ்ணசாமியை ஆயிரம் ரூபாயை வெற்றிவேல் இடம் கொடுத்துள்ளார். இதனை தொடர்ந்து கிருஷ்ணசாமி அளித்த புகாரியின் அடிப்படையில், லஞ்ச ஒழிப்பு போலீசார், ரசாயனம் தடவிய பணத்தை கிருஷ்ணசாமி மூலம் வெற்றிவேலிடம் கொடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: விபத்து வழக்கில் FIR கொடுக்க லஞ்சம் கேட்ட எஸ்.ஐ சஸ்பெண்ட்..!

அப்போது வெற்றிவேல் பணத்தை பெற்றுக் கொண்ட போது கையும் களவுமாக லஞ்ச ஒழிப்பு போலீசார் அவரை கைது செய்தனர். தொடர்ந்து போலீசாரிடமிருந்து வெற்றிவேல் அவரது இருசக்கர வாகனத்தில் தப்ப முயன்றுள்ளார். 

தொடர்ந்து பேரூர் பெரிய குளத்தின் கரையருகே சென்றபோது போலீசாருக்கு பயந்து வெற்றிவேல் அருகில் இருந்த குளத்தில் லஞ்ச பணத்துடன் குதித்துள்ளார். அப்போது போலீசார் சுற்றி வளைத்து வெற்றிவேலை கைது செய்ததுடன் லஞ்ச பணத்தையும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். இதன் தொடர்ச்சியாக விஏஓ வெற்றிவேல் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

இதையும் படிங்க: உதவியாளர் வைத்து லஞ்சம் பெற்ற மாஜி மாவட்ட வருவாய் அதிகாரி.. அதிரடி காட்டிய நீதிமன்றம்!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share