வத்தலகுண்டு ஆர்.டி.ஓ. அலுவலகத்தில் அதிரடி ரெய்டு... கட்டுக்கட்டாய் பணத்தை அள்ளிய லஞ்ச ஒழிப்புத்துறை...!
வத்தலகுண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் அதிரடி சோதனை நடத்தியது பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
வத்தலகுண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் லஞ்ச ஒழிப்பு போலீசார் திடீர் சோதனையில் ரூ.1,12,220 பறிமுதல் செய்யப்பட்டுள்ளதோடு, மோட்டார் வாகன ஆய்வாளரிடம் லஞ்ச ஒழிப்பு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தமிழகத்தில் மொத்தம் 91 வட்டார போக்குவரத்து அலுவலகங்கள், 56 யூனிட் அலுவலகங்கள் இயங்கி வருகின்றன. இவற்றில், ஓட்டுநர் உரிமம், வாகனங்கள் பதிவு எண் வழங்குதல், வாகன உரிமையாளர்களின் பெயர் மாற்றம், உரிமம் புதுப்பித்தல், வாகன வரி வசூல் உட்பட பல்வேறு பணிகள் நடக்கின்றன. பெரும்பாலான ஆர்.டி.ஓ. அலுவலகங்களில் சேவைக்காக செல்லும் மக்களிடம் இடைத்தரகர்களைக் கொண்டு லஞ்சம் வசூலிக்கப்படுவதாக கூறப்படுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் மோட்டார் வாகன ஆய்வாளராக இளங்கோவன் என்பவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், இந்த அலுவலகத்தில் வாகன பர்மிட் லைசென்ஸ் பதிவு எண் வழங்குதல் போன்ற பல்வேறு சேவைகளுக்கு புரோக்கர் வைத்து பணம் பெற்று வருவதாக திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதையும் படிங்க: நெல்லையில் பரவிய நச்சு காற்று... மத்திய, மாநில அரசுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!
இதனையடுத்து திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறை DSP.நாகராஜன் 2 இன்ஸ்பெக்டர்கள் உள்ளிட்ட 11 பேர் கொண்ட லஞ்ச ஒழிப்புத் துறையினர் வத்தலகுண்டு வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே வாகன புகை பரிசோதனை மையத்தில் உச்சப்பட்டியை சேர்ந்த பாண்டிய ராஜ் (34), சிலுக்குவார் பட்டி சேர்ந்த அஜய் ஜான்சன் (25) ஆகிய 2 புரோக்கர்களை வைத்து லஞ்சம் வாங்கியதாக கணக்கில் வராத ரூ.1 லட்சத்து 12 ஆயிரத்து 220 ரூபாய் ரொக்கம், அரசு ஆவணங்கள் ஆகியவற்றை கைப்பற்றி, மேலும், இது குறித்து மோட்டார் வாகன ஆய்வாளர் இளங்கோவனிடம் லஞ்ச ஒழிப்பு காவல் துறையினர் தீவிர விசாரனை மேற்கொண்டு வருகின்றனர்.
இதையும் படிங்க: 'எனக்கு எம்எல்ஏ டிக்கெட் தர வரை நகர மாட்டேன்' - முதல்வர் வீட்டின் முன் அமர்ந்து சிட்டிங் எம்எல்ஏ அதகளம்...!