×
 

வயநாட்டில் பேரழிவு..! கனமழையின் கோரத்தாண்டவம்..! இதுவரை 2 பேர் பலி..!!

வயநாடு நிலச்சரிவில் சிக்கி இதுவரை இரண்டு பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

கேரள மாநிலம் வயநாடு மாவட்டத்தின் மேப்பாடி பகுதியில் இன்று கனமழை தூண்டிய பெரும் நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த சம்பவம் அனக்கம்பொயில்-கள்ளாடி-மேப்பாடி இரட்டை சுரங்கச் சாலை திட்டத்தின் கட்டுமானப் பகுதியில், மீனாட்சி பாலத்துக்கு அருகில் நிகழ்ந்துள்ளது. இப்பகுதி 2024ஆம் ஆண்டு பெரும் நிலச்சரிவால் பாதிக்கப்பட்ட முண்டக்கை அருகே அமைந்துள்ளது. இந்த நிலச்சரிவில் சுமார் 20 பேர் மண்ணில் சிக்கி உள்ளதாக கூறப்படுகிறது. நிலச்சரிவில் சிக்கி இதுவரை இரண்டு பேர் உயிரிழந்துள்ளனர்.

கனமழை காரணமாக மலைப்பகுதியின் ஒரு பெரும் பகுதி இடிந்து விழுந்து, கீழே உள்ள சாலை மற்றும் அருகிலுள்ள ஓடையில் பெரும் அளவு மண், கற்கள் மற்றும் குப்பைகளைப் பரப்பியது. இந்த நிலச்சரிவு கட்டுமானத் தளத்தில் பணியாற்றியவர்கள், வாகனங்கள் அல்லது பாதசாரிகள் சிக்கியிருக்கலாம் என அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. உடனடியாக மீட்புப் பணிகள் தொடங்கப்பட்டன. சுமார் 20 பேர் மண்ணில் புதைந்து இருக்கலாம் என்ற அச்சம் எழுந்துள்ளது.

நிலச்சரிவில் அந்த பகுதியில் இருந்த தேவாலயம் ஒன்று முழுமையாக மண்ணில் புதைந்திருக்கிறது. விபத்து நடந்த போது சுமார் 20 பேர் அங்கு இருந்ததாக உள்ளூர் வாசிகள் தெரிவித்துள்ளனர். வயநாடு சுரங்கப்பாதை கட்டுமான பணி நடைபெறும் கல்லாடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் ஆறு பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக பேரிடர் மேலாண்மை ஆணையம் தகவல் தெரிவித்துள்ளது. இருப்பினும் ஏராளமானோர் நிலச்சரிவில் சிக்கி இருப்பதாக கூறப்படும் சம்பவம் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதையும் படிங்க: #BREAKING: வயநாட்டில் மீண்டும் நிலச்சரிவு..! மண்ணில் புதைந்த தொழிலாளர்கள்... துரிதகதியில் மீட்பு பணி..!!

மீட்பு பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன. நிலச்சரிவில் பல வீடுகள் சேதமடைந்த நிலையில் மீட்பு பணிகள் நடந்து வருகின்றன. இந்த நிலையில் நிலச்சரிவை அடுத்து மீட்புப்படையினர் தீவிர மீட்பு பணியில் ஈடுபட்டு வரும் சூழ்நிலையில், இரண்டு பேர் உயிரிழந்ததாக கூறப்பட்டுள்ளது. காயமடைந்த ஐந்து பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் கூறப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: அமோனியா விபத்து இடத்துக்கு போகல... பள்ளியில் ஷோவா?" அமைச்சர் கீர்த்தனா மீது சீமான் தாக்கு!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share