×
 

திருமா. எப்போ வருவாரு..? ஆதரவு தருவாரு..? “ 4 மணிக்கு” விசிக வெளியிடும் முக்கிய அறிவிப்பு..!

இன்று மாலை 4 மணிக்கு தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு அளிக்கப்படுமா என்ற நிலைப்பாடு குறித்து விசிக அறிவிக்க உள்ளது.

2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றி கழகம் ஒரு புதிய அரசியல் அலையை உருவாக்கியது. முதல் முறையாகத் தேர்தலை எதிர்கொண்ட இந்தக் கட்சி 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக மற்றும் அதிமுக போன்ற நீண்டகால அரசியல் கட்சிகளை பின்னுக்கு தள்ளிய இந்த வெற்றி தமிழக அரசியலில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

ஆனால், 234 உறுப்பினர்களைக் கொண்ட சட்டப்பேரவையில் ஆட்சி அமைக்க 118 உறுப்பினர்களின் ஆதரவு தேவைப்படும் நிலையில், தவெகவுக்கு 108 இடங்களுடன் முழு பெரும்பான்மை கிடைக்கவில்லை. இந்தப் பற்றாக்குறை தவெகவை கூட்டணி அரசியலின் பக்கம் தள்ளியது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு விஜய் ஆளுநர் ராஜேந்திர அர்லேகரை சந்தித்து ஆட்சி அமைக்க அழைப்பு வழங்கக் கோரினார்.

ஆனால், ஆளுநர் பக்கம் இருந்து தெளிவான பெரும்பான்மையை நிரூபிக்குமாறு வலியுறுத்தப்பட்டது. கம்யூனிஸ்டுகள் தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் விடுதலை சிறுத்தைகள் கட்சி இன்று முக்கிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது.

இதையும் படிங்க: BP எகிறுதே..! திக்.. திக்.. நிமிடங்கள்..! திருமா. பதிலுக்கு காத்திருக்கும் தமிழ்நாடு..!

இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்திற்கு ஆதரவா.? இல்லையா.? என்பது குறித்து முறைப்படி இன்று மாலை 4 மணிக்கு விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் அறிவிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நேற்று மாலை செயற்குழு கூட்டம் இணைய வழி வாயிலாக நடைபெற்றது என்றும் அப்போது முடிவெடுக்கும் முழு அதிகாரத்தை திருமாவளவனுக்கு ஒரு மனதாக அளித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இன்று மாலை 4 மணிக்கு அறிவிப்பு வெளியாகும் நிலையில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருக்கிறது. 

இதையும் படிங்க: திருமா. முடிவு தான் இறுதி..! ஆளுநர் ஆட்சி வரவே கூடாது..! வன்னியரசு திட்டவட்டம்..!

 
 
 
Gallery கேலரி Videos வீடியோஸ் Share on WhatsApp Share